தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வானில் பறக்கலாம் வாங்க...

வானில் பறக்கலாம் வாங்க...

வானில் பறக்கலாம் வாங்க...


மே 05, 2026 10:07 PM

மே 05, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

மே 05, 2026 10:07 PM மே 05, 2026 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவிகளின் கனவு வேலையாக 'ஏர் ஹோஸ்டஸ்' பணி உள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்வது, பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பது மற்றும் நல்ல ஊதியம் ஆகியவை இந்த பணி வழங்குவது பிரதான காரணம்.

ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கு குறைந்தபட்சம் 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில சர்வதேச நிறுவனங்கள் பட்டப்படிப்பை விரும்புகின்றன. ஏவியேஷன் அல்லது ஹாஸ்பிடாலிட்டி துறையில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்வது சிறந்தது. குறிப்பாக, விருந்தோம்பல், சுற்றுலா அல்லது மொழியியல் துறையில் பட்டம் பெற்றிருப்பது கூடுதல் பலம். இண்டிகோ போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது சொந்தப் பயிற்சி மையங்கள் மூலமாகவே உரிய பயிற்சிகளை வழங்குகின்றன.

ஏர் ஹோஸ்டஸ் பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 155.5 செ.மீ., உயரமும், அந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடையும் பெற்றிருப்பது அவசியம். மேலும், பார்வைத்திறன் 6/6 பெற்றிருப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம்.

இவற்றுடன், இத்துறையில் பணிபுரிய முறையான கல்வியுடன் தனிப்பட்ட திறன்களும் மிகவும் அவசியம். குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக பேசும் தொடர்புத் திறன் பெற்றிருப்பதுடன், பிற மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

பயணிகளிடம் எப்போதும் கனிவாகவும், புன்னகையுடனும் பழகும் விருந்தோம்பல் பண்பும், அவசரக் காலங்களில் பதற்றமடையாமல் பயணிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் நெருக்கடி மேலாண்மைத் திறனும் மிக முக்கியம். சக ஊழியர்களுடன் இணைந்து ஒரு குழுவாகப் பணியாற்றும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இந்தத் துறையில் சிறந்த எதிர்காலம் உண்டு.

இது தவிர, ஹோட்டல்களில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் இருந்தால், அது நேர்காணலின் போது கூடுதல் முன்னுரிமை பெற்றுத் தரும். இறுதியாக, நேர்காணலில் வெற்றி பெற முறையான உடல்வாகு பராமரிப்பு மற்றும் சிறந்த ஆளுமைத் திறன் அவசியம்.

இந்தியாவில் ஒரு தொடக்க நிலை விமானப் பணியாளருக்கு மாதம் சுமார் 50 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. அனுபவம் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் பல லட்சங்களாக உயரக்கூடும். இது தவிர, இலவச விமானப் பயணச் சீட்டுகள், தங்கும் வசதி மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

சரியான திட்டமிடலும், சீரிய பயிற்சியும் இருந்தால், வானில் பறக்கும் தங்கள் கனவை நினைவாக்கிக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us