தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/முடிவெடு ராஜா... நல்ல முடிவெடு!

முடிவெடு ராஜா... நல்ல முடிவெடு!

முடிவெடு ராஜா... நல்ல முடிவெடு!


மார் 26, 2016 12:00 AM

மார் 26, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 26, 2016 12:00 AM மார் 26, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முடிவெடுத்தல் அல்லது தீர்மானித்தல் என்பது, திட்டமிடல் போன்றே,  இதுவும் ஓர் அற்புதமான கலை. இதை சரியான முறையில் கையாண்டால், மேற்கொள்ளும் எந்த காரியமும் ‘சக்ஸஸ்’ ஆக முடியும். வெற்றியின் சூட்சுமமே இதிலேதான் அடங்கியிருக்கிறது!

தமக்கு விருப்பமற்ற, பொருந்தாத படிப்பை தேர்வு செய்யும் மாணவன், தேர்வில் தோல்வியைத் தழுவி எதிர்காலத்தையே இழக்க நேரிடலாம்;  ஒரு ஆணோ, பெண்ணோ தனது எண்ண ஓட்டத்துக்கு பொருந்தக்கூடிய சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யாவிடில் நரகத்தை பூமியிலேயே அனுபவிக்க நேரிடும்.

முதலாளியாக இருக்கும் ஒருவர், புதிய முதலீடு மற்றும் சந்தைப்படுத்துதலில் தவறான முடிவுகளை மேற்கொண்டால் கடனாளியாகிவிடுவார்; வாகன ஓட்டி பயணத்தின்போது, சாலையில் தவறான முடிவெடுத்தால் விபத்துக்குள்ளாகி உடன் பயணிப்போர் உயிரையும் குடித்துவிடுவார். நம் வாழ்வின் ஒவ்வாரு கணமும் முடிவெடுத்தலில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

புதிதாக தொழில் துவங்க விரும்பும் ஒருவர், அதற்கான முடிவெடுக்கும் முன், ஆராய வேண்டும். துவக்கும் நிறுவனத்தின் உற்பத்தி பொருளுக்கு சந்தையில் வரவேற்பு உள்ளதா,  இதே பொருளை உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்கள் எந்த மாதிரியான சந்தை சவால்களை எதிர்கொள்கின்றன; எவ்வாறான வெற்றிகரமான வழிமுறைகளை பின்பற்றுகின்றன என பல கோணங்களிலும் ஆராய்ந்த பிறகே, தொழில் துவங்கும் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறின்றி, வெறுமனே விருப்பத்தின் பேரில் மட்டும் முடிவெடுத்தால், நம் கனவுகளை முடித்துவிடும்; நஷ்டமே மிஞ்சும்.

‘முடிவெடுத்தல்‘  என்பது, ‘சக்ஸஸ்’ என்ற வார்த்தையின் அடிப்படை. இதை சரிவர கையாண்டால், எப்போதும் போடலாம் வெற்றிநடை!

-கவி. இனியா, கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us