தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சாதிக்க பிறந்தவர்கள் நீங்கள்!

சாதிக்க பிறந்தவர்கள் நீங்கள்!

சாதிக்க பிறந்தவர்கள் நீங்கள்!


மார் 25, 2016 12:00 AM

மார் 25, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 25, 2016 12:00 AM மார் 25, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வை சந்திக்கும் மாணவ, மணிகளே! தேர்வு நேரத்தில் பயத்தை நீக்கி, மனந்தளராமல் தேர்வை சந்தியுங்கள். இத்தேர்வு புதில்ல ஆண்டுதோறும் உங்களை சந்திக்கின்ற ஒன்று இந்நேரத்தில் உங்களுடைய எண்ணம் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்பதே!

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்சி திருவினையாக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று. எனவே முயற்சியுடன் தேர்வை வெல்ல முயலுங்கள் வெற்றி உங்களுடையதே!

இத்தேர்வு நேரத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்துங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். இத்தேர்வு நேரத்தில் பதட்டமில்லாமல் பெற்றோரை பதற்றமடையச் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் உணவினை ஏற்றுக் கொண்டு தெளிவான மனதுடன் தேர்வு அறைக்குச் செல்லுங்கள்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில குறிப்புகள்

* நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள்
* அதிகாலையில் படிப்பது மனதில் நன்கு பதியும்
* காலை உணவினைத் தவிர்க்காதீர்கள்
* தேர்வு நேரத்திற்கு முன்பே தேர்வு அறைக்கு செல்லுங்கள்
* தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்
* வினாத்தாளைப் பெற்றவுடன் பதட்டம் கொள்ளாமல் பொறுமையுடன் வினாக்களை நன்கு படியுங்கள்.
* பதட்டத்துடன் வினாத்தாளை காண்பீர்களானால் பதில் தெரிந்த வினாக்கள் கூட உங்கள் கண்களுக்கு புலப்படாது.
* பதில் நன்கு தெரிந்த வினாக்களை முதலில் எழுதுங்கள்
* தெளிவாக எழுதுங்கள், முக்கியமான வார்த்தைகள் சம்பங்கள் வருடங்கள் இவற்றுக்கு
* அடிக்கோடிட்டு எழுதுங்கள்
* தேர்வு எழுதும் போது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் சிதறவிடாதீர்கள்

ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆண்டுகள் அல்லது 12 ஆண்டுகள் பள்ளியில் 1 வருடத்திற்கு மூன்று பருவத் தேர்வு வீதம் 36 தேர்வுகளை சந்தித்துள்ள அனுபவம் உங்களுக்கு உள்ளது. இந்த தேர்வு ஒன்றும் புதிதல்ல என்பதை மனதில் கொண்டு மன தைரியத்துடன் பள்ளி இறுதியாண்டு தேர்வினை சந்தியுங்கள்; வெற்றி நமதே! என்பதை மனதில் இருத்தி கொள்ளுங்கள்.

தேர்வு முடிந்த பின்
ஒவ்வொரு நாளும் தேர்வை முடித்து வந்தவுடன் மற்ற மாணவர்களை கலந்து ஆலோசிக்காதீர்கள். நேராக வீடு சென்று சற்று ஓய்வெடுத்த பின் நாளைய தேர்வுக்கு தயாராக முயலுங்கள். முடிந்து போன தேர்வைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டாம்.

உடல் நலனில் கவனம்
சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடுங்கள். வெப்பத்தை தணிக்கும் குளிர்ச்சி தரும் பழங்களை சாப்பிடுங்கள், குளிர்பானங்களை தவிருங்கள். பழச்சாறுகளை குடியுங்கள். குறித்த நேரத்திற்கு உறங்கச் செல்லுங்கள். உறக்கத்தை தவிர்க்காதீர்கள்.

அதிகாலைப் பொழுதில் எழுந்து படியுங்கள். உடல் நலனே மிக முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள் பயமின்றி தேர்வை சந்தித்து சாதனை படையுங்கள்; மாணவர்களே நாளைய உலகம் உங்கள் கல்யில் என்பதை மறவாதீர்கள்.

-நாகமணி, வில்லிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us