தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எளிய முறையில் பொறியியல், அறிவியல் படிப்புகள்

எளிய முறையில் பொறியியல், அறிவியல் படிப்புகள்

எளிய முறையில் பொறியியல், அறிவியல் படிப்புகள்


அக் 01, 2011 12:00 AM

அக் 01, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 01, 2011 12:00 AM அக் 01, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய ஐ.ஐ.டி-கள் மற்றும் ஐ.ஐ.எஸ்சி(IISc) ஆகியவை இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ரீதியில் கற்றலுக்கான தேசிய திட்டத்தின்(National programme on technology enabled learning - NPTEL) மூலமாக, அனைத்துப் பொறியியல் மற்றும் அறிவியல் பாடத்திட்டங்களையும் ஆன்லைனில் இலவசமாகப் பெற முடியும். இந்த திட்டமானது, MIT நடத்தும் திறந்தவெளி பாடஉபகரண திட்டத்தை விட சிறந்து விளங்குகிறது என IIT வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அபரிமிதமான இலவச தகவல்கள்

இந்தத் திட்டத்தின் மூலமாக, அங்கீகாரமிக்கப் பாடத்திட்டங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இத்திட்டத்தின் முதற்பகுதி காலகட்டத்தில்(2002-2007), இதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nptel.iitm.ac.in மூலமாக 125 வலை அடிப்படையிலானப் பாடங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 110 பாடங்களுக்கான பாடத்திட்டங்கள், வீடியோ பார்மேட்(Vedio format) விரிவுரைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இதுவரை, 5 முக்கிய பொறியியல் பாடங்கள் மற்றும் சில ஒருங்கிணைந்த அறிவியல் பாடங்கள் போன்றவை இம்முறையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடங்களைப் பெறுதல்

இணையத்தின் மூலமாக இவற்றைப் பெறுவது முற்றிலும் இலவசம். ஆனால், இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விரைவாக பதிவிறக்கம் செய்யும் வசதிகள் இல்லை. மிகச் சில மாணவர்களே தனிப்பட்ட பிராட்பேண்ட்(Broad band) வசதியைப் பெற்றுள்ளனர். இதற்கு ஒரு சிறந்த மாற்று என்னவெனில், ரூ.200 செலவில், ஒரு தனிப் பாடத்திற்கான டிவிடி(DVD) -யை வீடியோ பார்மேட்டில் பெற்றுக்கொள்வதாகும் அல்லது ஒரு கல்லூரியே முழு பாட உபகரணங்களையும் ஹார்டு டிரைவ்(Hard Drive) மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், முழு பாட உபகரணங்களையும் மூன்று 500 ஜிபி(GB) -க்களாக உள்ள ஹார்டு டிஸ்க் -களைக்(Hard Disk)கொண்ட ஒரு செட் ரூ.50,000 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பாட உபகரணத்தை ஆன்லைனில் வாங்க முடியுமா?

சென்னை ஐஐடி-ன் கீழ் இயங்கும் போட்பிரிட்ஜ் கல்வி சேவைகள்(Bodhbridge educational services) என்ற நிறுவனத்திடம் NPTEL ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனமானது www.btechguru.com என்ற பொறியியல் வழிகாட்டி இணையதளத்தை நடத்துகிறது. இதன்மூலம், பாடங்களுக்கான DVD-களை ஒன்றுக்கு ரூ.200 என்ற விலையில் மேற்கண்ட நிறுவனத்திடம் ஆர்டர் செய்யலாம்.

மாணவர்கள் NPTEL-ஐ நோக்கி வரக் காரணம்

GRE அல்லது GATE போன்ற போட்டித் தேர்வுகளுக்காகவும், பல்கலைக்கழக தேர்வுகளுக்கான தயார்படுத்தல் பணிக்காகவும் இந்த சேவையின் மூலம் உபகரணங்களை மாணவர்கள் பெறுகிறார்கள். இத்தகைய மாணவர்களின் பணியை எளிதாக்கும் விதமாக, அந்தந்த பல்கலைக்கழகப் பாடங்களை தனித்தனியாக தரம் பிரித்து பெறுவதற்கு ஏற்றபடி போட்பிரிட்ஜ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

1000 பாடங்கள் மற்றும் 42 பிரிவுகள்

சுமார் ரூ.100 கோடி செலவில், தனது இரண்டாம் கட்ட திட்டத்தில், IIT -கள் மற்றும் IISc பாடத்திட்டங்கள் அனைத்தும் உள்ளடங்கியதாக சுமார் 1000 பாடங்களை வழங்க NPTEL திட்டமிட்டுள்ளது. ஒருவர் தன் வீட்டின் அறையிலேயே அமர்ந்துகொண்டு, பட்டம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லையென தொடர்புடைய ஒரு கல்வியாளர் கூறுகிறார். குறைந்தபட்சம், பட்டப் படிப்பின் பெரும்பான்மையான விஷயங்களையாவது வீட்டிலிருந்தபடியே ஒரு மாணவர் மேற்கொள்ள முடியும் என்கிறார் அவர்.

இந்தத் திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு www.nptel.iitm.ac.in மற்றும் www.btechguru.com என்ற இணையதளங்களுக்கு செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us