தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கப்பல் கட்டுமானம் கற்றுக்கொள்ளுங்கள்

கப்பல் கட்டுமானம் கற்றுக்கொள்ளுங்கள்

கப்பல் கட்டுமானம் கற்றுக்கொள்ளுங்கள்


நவ 12, 2011 12:00 AM

நவ 12, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 12, 2011 12:00 AM நவ 12, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கப்பல் கட்டுமானம் (NAVAL ARCHITECTURE) என்பது கடல் சார்ந்த கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தல், கட்டுமானம், பாதுகாத்தல் மற்றும் சீரமைப்பு உள்ளிட்டவற்றை படிக்கும் இன்ஜினியரிங் துறை.

நம்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல் கட்டுமானத் துறையில், கடல் சார்ந்த வாகனங்களின் அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வுகள், வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதலின் மதிப்பாய்வுகள் போன்றவை பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

பல்லாயிரம் கிலோ எடை கொண்ட சரக்குகளை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கொண்டு வரவும் கப்பல் வழி போக்குவரத்து தான் பெருமளவு பயன் படுத்தப்படுகிறது. இதனால் அண்டை நாடுகளுடனான வணிகம் மேம்படுகிறது.

நீரில் செல்லும் வாகனங்களை வடிவமைப்பது கடினம். நீரில் செல்வதற்கு ஏற்றவாறு கப்பல்களை வடிவமைத்தல், அவற்றின் உந்து விசையை ஆராய்தல், கட்டுமானப்பணிகளைமேற்கொள்ளுதல் போன்றவற்றை இத்துறையில் ஆராய்ந்து படிக்கலாம்.

படிப்புகள்: பி.இ.,/பி.டெக்., பிரிவில் கப்பல் கட்டுமான படிப்புகள் உள்ளன. கப்பல் வடிவமைத்தல், கப்பல் கட்டமைப்பு, கப்பல் கோட்பாடு, கப்பல் பாதுகாப்பு, கப்பல் நீர் இயக்கவியல், நீர்நிலையியல் போன்ற பாடங்களை படிக்கலாம். இந்த நான்கு ஆண்டு படிப்பில் மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

பயிலும் நிறுவனங்கள்:

* ஐ.ஐ.டி.,சென்னை (www.iitm.ac.in/)

* ஐ.ஐ.டி., காரக்பூர் (www.iitkgp.ac.in/)

* கொச்சி அறிவியல் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகம், கொச்சின் (cusat.ac.in/)

*ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (www.andhra university.info/index.html)

* இன்ஸ்டிடியூட் ஆப் ஷிப் பில்டிங் டெக்னாலஜி, கோவா (www.isbt.ac.in)

வேலைவாய்ப்பு: சரக்கு கப்பல், பயணிகள் கப்பல் மற்றும் படகுகளை வடிவமைத்தல், எண்ணெய் மற்றும் வாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள், கன்டெய்னர் கொண்ட கப்பல்கள், போர் ரக விமானம் தாங்கிய கப்பல்கள், வானூர்திகள் கொண்ட கப்பல்கள், நீராவிப் படகுகள், மீன் பிடி படகுகள், பாய்மரபடகுகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து, அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கப்பல் கட்டுமான இன்ஜினியரைச் சேரும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா, கொரியா, சிங்கப்பூர், லண்டன், நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு எதிர்காலம் உள்ளது. பட்டம் பெற்றவர்கள் கப்பல் கட்டுமான பணியில் மட்டுமல்லாமல் அவை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us