நவ 19, 2011 12:00 AM
நவ 19, 2011 12:00 AM
பேஷன் மெர்ச்சன்டைசிங் என்பது புதுவிதமாக வடிவமைத்த ஆடைகளை விற்பனை செய்தல். இப்படிப்பு மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிறைந்த சம்பளத்துடன் வேலை வாய்ப்பை பெறலாம். இதற்கு சிறந்த தோற்றம், கலையார்வம், புதுமையான முறையில் சிந்தித்தல் அவசியம். இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன அவை:
வோக் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி
பெங்களுரூவில் உள்ள இக்கல்வி நிறுவனம் பேஷன் மெர்ச்சன்டைசிங் பரிவில் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பில் சேர்வதற்கு பட்டப்படிப்பு அவசியம். விவரங்களுக்கு www.voguefashioninstitute.com/default.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பி.டி.,சோமனி இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட் அண்ட் பேஷன் டெக்னாலஜி
மும்பையில் உள்ள இக்கல்வி நிறுவனம் பேஷன் மெர்ச்சன்டைசிங் பரிவில் டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பிற்கு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.bdsomani.com/fcourses.htm என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
ஜே.டி., இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி
மும்பை மற்றும் பெங்களுரூவில் உள்ள இக்கல்வி நிறுவனம், பேஷன் மெர்ச்சன்டைசிங் பரிவில் டிப்ளமா படிப்புகளை வழங்குகிறது. இதற்கு பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.jdinstitute.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பியர்ல் அகடமி ஆப் பேஷன்
டில்லி மற்றும் சென்னையில் உள்ள இக்கல்வி நிறுவனம் பேஷன் மெர்ச்சன்டைசிங் பிரிவில் இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமா படிப்புகளை வழங்குகிறது. இதற்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கsலாம். எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு மற்றும் குரூப் டிஸ்கஷன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு http://pearlacademy.com/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்
நொய்டாவில் உள்ள இக்கல்வி நிறுவனம் பேஷன் மெர்ச்சன் டைசிங் பரிவில் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பில் சேர பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் எழுத்துத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு www.fddiindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
