தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அணு மருத்துவத்தின் முக்கியத்துவம்

அணு மருத்துவத்தின் முக்கியத்துவம்

அணு மருத்துவத்தின் முக்கியத்துவம்


ஜன 04, 2012 12:00 AM

ஜன 04, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 04, 2012 12:00 AM ஜன 04, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான பாடங்கள் அணு மருத்துவத்தில் கற்றுத்தரப்படுகின்றன. நோயை அறியவும், குணப்படுத்தவும் கதிர்வீச்சை பயன்படுத்துகின்றனர். நோய் அறிதலுக்கு பல்வேறு முறைகள் புழக்கத்தில் இருந்தாலும் அணு மருத்துவத்தின் மூலம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து துல்லியமான தகவல்களை பெற முடிகிறது.

அணு மருத்துவ முறைகள் பாதுகாப்பானவை. இதனால் நோயாளிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படுவதில்லை. மயக்க மருந்தும் இதற்கு அவசியமில்லை. அணு மருத்துவ நிபுணர்கள், டாக்டர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்களின் முக்கிய பணிகள்

*  கதிரியக்க மருந்துகளை தயாரித்து நோயாளிகளுக்கு செலுத்துவது.

*  நவீன கதிர்வீச்சு கருவிகளின் உதவியுடன் நோயாளிகளை படமெடுப்பது.

*  கம்ப்யூட்டர் உதவியுடன் படத்தின் தரத்தை மேம்படுத்துவது

*  லேப்களில் உயிரிமாதிரிகளை சோதனை செய்வது

*  நோயாளியை பற்றிய மருத்துவ குறிப்புகளை டாக்டருக்கு அனுப்பி வைப்பது உறுப்புகளை படமெடுக்க, உயிரிமாதிரிகளை சோதிக்க, நோய்க்கு சிகிச்சை அளிக்க "ரேடியோ பார்மாசூட்டிகல்' கதிரியக்க பொருட்களை பயன்படுத்துவதை அணு மருத்துவ தொழில்நுட்பம் என்கின்றனர். அணு மருத்துவ வல்லுனர்கள் டாக்டர்கள், நர்சுகள், கம்ப்யூட்டர் நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவ குழுவில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

சில ஆண்டுகளாக இந்த துறை வளர்ச்சியை சந்திக்கிறது. வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. நடுத்தர வயதினர், முதியோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். மருத்துவ தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப அணு மருத்துவத்தின் பயன்பாடும் அதிகரிக்கும்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வு நிறுவனங்களில் அணு மருத்துவ நிபுணர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தலைமை நிபுணர், ஆராய்ச்சி நிபுணர், ஆசிரியர் போன்ற வாய்ப்புகளும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us