தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அசத்தும் அனிமேஷன் துறை

அசத்தும் அனிமேஷன் துறை

அசத்தும் அனிமேஷன் துறை


ஜன 13, 2012 12:00 AM

ஜன 13, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 13, 2012 12:00 AM ஜன 13, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டுபிடித்தாரோ அப்போதிருந்தே அனிமேஷன் துறைக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் வளரத் தொடங்கின. தொழில்நுட்பம் வளர அந்த நுட்பங்களை அனிமேஷன் துறை இழுத்துக் கொண்டது.

சாப்ட்வேர் மட்டுமே அனிமேஷன்களை உருவாக்கி விடாது. அனிமேஷன் அடிப்படைகளை தெரிந்தவர்களுக்கு சாப்ட்வேர் உதவி செய்யும். கற்பனைத்திறன், விடா முயற்சி, கடின உழைப்பு கொண்டவர்களுக்கு இத்துறை சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.

சர்வதேச அளவில் எடுக்கப்படும் டிவி தொடர்கள், சினிமா, இன்டர்நெட் என்று ஏராளமான துறைகளில் அனிமேஷன் பயன்படுகிறது. இத்துறைகள் நாள்தோறும் வளர்ந்து வருவதாலும், பணியாளர்களின் தேவை அதிகரித்திருப்பதாலும், நல்ல வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்துறையில் நுழைய விரும்புவோர் முதலில் ஓவியக்கலையில் ஆர்வம் உடையவராகவும், பார்த்ததையும், கற்பனையில் நிகழ்கிற விஷயங்களையும் அப்படியே வரைந்து கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும், பழக்க வழக்கங்களையும், பல்வேறு மக்களைப் பற்றியும், போக்குவரத்து இதர வசதிகளைப் பற்றிய அறிவும் உள்ளவராக இருக்க வேண்டும்.

குறிப்பாக அன்றாட விஷயங்கள் பற்றிய தெளிவு இருப்பவரே, அந்தந்த காலகட்டத்தில் நல்ல ரசனையுடனான அனிமேஷன்களை உருவாக்கும் தகுதி உடையவராக இருக்கிறார். ஏராளமான நிறுவனங்கள் இதற்கான பாடத்திட்டங்களை நடத்துகின்றன. சிறந்த பயிற்சி நிலையங்களை தேர்ந்தெடுத்து படித்தால், அனிமேஷன் துறையில் சாதிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us