தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நியூக்ளியர் பொறியியல் படிப்பு - ஓர் அலசல்

நியூக்ளியர் பொறியியல் படிப்பு - ஓர் அலசல்

நியூக்ளியர் பொறியியல் படிப்பு - ஓர் அலசல்


பிப் 03, 2012 12:00 AM

பிப் 03, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 03, 2012 12:00 AM பிப் 03, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூக்ளியர் பொறியியல் என்பது பொறியியலின் ஒரு பிரிவு. இப்பிரிவானது, நியூக்ளியர் பிசிக்ஸ் விதிமுறைகளின் அடிப்படையில் தடைபட்ட அல்லது செயலிழந்த ஆட்டோமிக் நியூக்ளி செயல்பாடு பிற துணை ஆட்டோமிக் இயற்பியல்கள் ஆகியவற்றின் பயன்பாடு பற்றியதாகும்.

மேலும், இதன் செயல்பாடானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்குவதல்ல. தொடர்புகொள்ளுதல், அணு பிளப்பு அமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் நியூக்ளியர் ரியாக்டர்ஸ், நியூக்ளியர் பவர் பிளான்ட்ஸ் மற்றும் அணு ஆயுதங்கள் போன்ற அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

மேலும், இந்தத் துறையானது, அணு பிணைவு(fusion), ரேடியேஷனின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகள், அணு பாதுகாப்பு, உஷ்ணம் மற்றும் தெர்மோடைனமிக்ஸ் கடத்தல், அணு எரிபொருள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்பம் மற்றும் அணு சோதனை உள்ளிட்ட பல துறைகள் தொடர்புடையது.

நியூக்ளியர் பொறியாளரின் பணிகள்

இன்றைய நிலையில், நியூக்ளியர் பொறியியல் என்பது ஆற்றல் வாய்ந்த மற்றும் விரிவடையும் துறையாக உள்ளது மற்றும் நியூக்ளியர் பொறியாளர்கள், மனித சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட ஏராளமான துறைகளில் பங்களிப்பை செய்கிறார்கள்.

அணு பிணைவு மற்றும் பிளப்பின் மூலமாக நீடித்த மற்றும் அணு ஆற்றலின் பொருளாதார உற்பத்தி, அணுக்கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் அவற்றை அகற்றுதல், தொழில்நுட்ப மேம்பாடு, உயர்வெப்ப பயன்பாடுகளுக்காக கதிர்வீச்சை தாங்கும் உபகரணங்கள், அணு உபகரணங்கள் சட்டரீதியாக கடத்தப்படுவதை கண்டுபிடிப்பதன் மூலம் அவற்றுக்கு பாதுகாப்பளித்தல், மருத்துவ இமேஜிங் மற்றும் தெரபி ஆகியவற்றுக்காக, நியூக்ளியர் செய்முறைகளின் நவீன பயன்பாடுகள் போன்ற பலவிதமான துறைகளில் நியூக்ளியர் பொறியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இப்படிப்பின் பிரபலம்

பட்டப் படிப்பு என்ற வகையில், நியூக்ளியர் பொறியியல் துறையானது, ஒரு ஆர்வமுள்ள மற்றும் ஊக்கம் வாய்ந்த படிப்பாக மாறியுள்ளது. ஆற்றல் மற்றும் ஆற்றல் கொள்கைகள் என்பவை, இன்று நாடு முழுவதும் பேசப்படும் துறைகளாக உள்ளன. செயலற்ற எல்லைக்குட்பட்ட பிணைவு மற்றும் காந்தவியல் பணிகள் மற்றும் நான்காம் தலைமுறை பிளவு ரியாக்டர் அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கிய புதிய முயற்சிகள் ஆகியவற்றுடன் பிளவு மற்றும் பிணைவு ஆராய்ச்சிகள் போன்றவையும் தேசிய அளவில் பெயர்பெற்று விளங்குகின்றன.

இதுதொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

நியூக்ளியர் பொறியியல் தொடர்பான முதுநிலைப் படிப்புகளை IITs வழங்குகின்றன. மேலும், பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பிணைவு மற்றும் பிளாஸ்மா பிசிக்ஸ் தொடர்பாகவும், உற்பத்தி பொறியியலில் ரேடியோ ஐசடோப் பயன்பாடுகள் பற்றியும், computer aided tomography பற்றியும், ரியாக்டர் பாதுகாப்பு பற்றியும், நியூக்ளியர் உதவி அமைப்புகளில் வெப்ப கடத்தல் பற்றியும் மற்றும் ரேடியேஷன் கண்டுபிடிப்பு கருவியின் மேம்பாடு பற்றியும், தியரி நிலை மற்றும் செயல்பாட்டு நிலையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளை வழங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us