பிப் 04, 2012 12:00 AM
பிப் 04, 2012 12:00 AM
ஜியோமேடிக்ஸ் பொறியியல் என்பது, விரைவாக வளர்ந்து வரும் ஒரு படிப்பாகும். இது, பரப்பளவு அல்லது இருப்புநிலை தொடர்பான தகவல் பற்றிய படிப்பாகும். பரவலான நிலையிலான தரவுகளை பார்க்க மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய அம்சம் இடச்சூழலாகும்(Location).
அளவீட்டு அறிவியலின் மூலமாக, தொடர்புடைய தரவுக் கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் இருப்புநிலை தகவலுக்கு பொறியியல் கொள்கைகளைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலமாக, ஜியோமேடிக்ஸ் பயன்பாட்டை மேற்கொண்டு, இருப்புநிலை தகவல் பொறியாளர்கள் செயல்படுகிறார்கள்.
ஜியோமேடிக்ஸ் பொறியாளர்கள், உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய இருப்புநிலை தரவு உள்கட்டமைப்புகளை நிர்வகிக்கிறார்கள்.
மனித உருவாக்கங்கள், இயற்கை வளங்கள், சமுத்திரங்கள் மற்றும் நிலங்கள் பற்றிய இருப்புநிலை தகவல்களை பகுப்பாய்வு செய்யவும், சேகரிக்கவும் உண்டான அமைப்புகளை ஜியோமேடிக்ஸ் பொறியாளர்கள், வடிவமைக்கிறார்கள், மேம்படுத்துகிறார்கள் மற்றும் இயக்குகிறார்கள்.
இந்தப் பொறியியல் துறையின் பயன்பாடுகள், புதிய மற்றும் பாரம்பரிய பிரிவுகளிலிருந்து அறிவியல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியவை.
மேலும், ஜியோமேடிக்ஸ் பொறியியல் என்பது, Global Positioning system - GPS, பூகோள தகவல் அமைப்புகள்(Geographic information system), Geodetic positioning(Geodetic என்பது புவியமைப்பியல் துறையின் ஒரு பிரிவு) மற்றும் ரிமோட் சென்சிங் போன்ற, உலக கடற்பயணம், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நகரத் திட்டமிடல் துறைகளில் பெரும் புரட்சி செய்த அம்சங்களை, பொறியியலுடன் இணைக்கிறது.
ஜியோமேடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் நுணுக்கங்கள் கீழ்காணும் பலவிதமான துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
* வனம்
* வேளாண்மை
* சுரங்கம்
* கடலாராய்ச்சி
* ஹைட்ரோகிராபி(கடலாராய்ச்சி துறையில் ஒரு பிரிவு)
* சுற்றுச்சூழல் மேலாண்மை
* நகர்ப்புற திட்டமிடல்
* பொதுப் பயன்பாடுகள்
* கடற்கரை பிராந்திய மேலாண்மை
* போக்குவரத்து
* கடற்பயணம்
* பாதுகாப்பு
* மருத்துவ எபிடெமியோலஜி(நோய் பரவல் மற்றும் தடுப்பு அறிவியல் ஆய்வு)
* மாசுபாட்டு மேலாண்மை
* ஜியோமார்கெட்டிங்
* கல்வி மற்றும் சுகாதார வசதிகளைத் திட்டமிடுதல்
* அனுப்புதல் மற்றும் அவசரநிலை நடவடிக்கைகள்
* பொருளாதாரம் மற்றும் நிதிநிலை திட்டமிடல்கள்
* காப்பீடு
