பிப் 21, 2012 12:00 AM
பிப் 21, 2012 12:00 AM
இந்தியா மட்டுமல்ல, உலகளவில், ஆட்டோமொபைல் துறைக்கென்று எப்போதுமே ஒரு தனி மவுசும், நிறைய வேலை வாயப்புகளும் உள்ளன.
இந்தியப் போக்குவரத்தானது, பெருமளவில் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பினும், மக்களின் தேவை, ஆற்றல் சேமிப்பு, கலாச்சார உணர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் போன்றவற்றின் மீதான கவனம், ஆட்டோமொபைல் வடிவமைப்பில் குறைந்தளவே செலுத்தப்படுகின்றன.
வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொள்ளும்போது, மேற்கூறிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம்(NID), போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில், 2.5 வருட முதுநிலைப் படிப்பை வழங்குகிறது. ஒருவர், போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கான பயிற்சியை இந்தப் படிப்பு வழங்குகிறது.
மேலும், இந்தப் படிப்பானது, ஒரு தொழில்முறை வடிவமைப்பாளரின் நெறிமுறைப் பொறுப்புகள் மற்றும் போக்குவரத்து வடிவமைப்பின் சமூகப் பொருளாதார, கலாச்சார, சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றைப் பற்றிய புரிந்துணர்வுகளை மேம்படுத்துகிறது. அவர்கள் வெறுமனே, ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே, பயிற்சியளிக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.
6 மாத கால அளவே கொண்ட குறுகியகால முதுநிலை டிப்ளமோ படிப்பை, மகாராஷ்டிர தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வழங்குகிறது.
மேற்கூறிய 2.5 வருட முதுநிலைப் படிப்பை மேற்கொண்ட ஒருவர், ஆட்டோமொபைல் துறையிலும் பணிக்கு சேரலாம் அல்லது நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு துறையிலும் சேரலாம். இப்படிப்பில் சேர்வதற்கான தகுதி, மெக்கானிக்கல், தயாரிப்பு அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ.
தகுதி
B.E/B.Tech/B.Arch/Diploma மெக்கானிக்கல் அல்லது தயாரிப்பு பொறியியல்
படிப்புக் கட்டணம்
வருடத்திற்கு ரூ.1.5 லட்சம்
ஆரம்ப சம்பளம்
வருடத்திற்கு 5 லட்சம்
படிப்பை வழங்கும் கல்வி நிறுவனம்
தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் - அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.
