தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சவாலும், மதிப்பும் நிறைந்த பொதுமக்கள் தொடர்பு பணி!

சவாலும், மதிப்பும் நிறைந்த பொதுமக்கள் தொடர்பு பணி!

சவாலும், மதிப்பும் நிறைந்த பொதுமக்கள் தொடர்பு பணி!


பிப் 21, 2012 12:00 AM

பிப் 21, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 21, 2012 12:00 AM பிப் 21, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுமக்கள் தொடர்பு என்னும் ஒரு தொடரை முதன்முதலில், கடந்த 1807ம் ஆண்டு பயன்படுத்தியவர், முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன் என்று நம்பப்படுகிறது. காலப்போக்கில், இந்த சொற்றொடர், நிறுவனங்களால், அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பு கவனத்துடன் கடைபிடிக்கப்படும் ஒரு செயல்பாடாக மாறிப்போனது. நிறுவனங்கள் மட்டுமின்றி, புகழ்பெற்ற தனிநபர்களும் இந்த செயல்பாட்டைக் கடைபிடிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 1920ம் ஆண்டுகளில், இந்திய ரயில்வே, சுற்றுலாப் பயணிகளைக் கவர, கண்காட்சிகள், விழாக்கள் நடத்தி, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தபோது, இந்த செயல்பாடு பிரபலமடையத் தொடங்கியது.

பொதுமக்கள் தொடர்பு என்பதன் கருத்தாக்கம்

பொதுமக்கள் தொடர்பு என்பது, மேலாண்மை, மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை மற்றும் இந்த நடவடிக்கையானது, வியூகரீதியாக, உறுப்பினர்களுக்கும், நிறுவனத்திற்கு நல்ல உறவுமுறையை ஏற்படுத்தி, அதன்மூலம் நிறுவனம், தனது நோக்கத்தை அடையும் செயல்பாடாகும்.

ஒரு நிறுவனத்திற்கான நல்ல பொதுமக்கள் தொடர்பு செயல்பாடு என்பது, நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் பரஸ்பர நன்மைகள் ஆகியவை இணைந்த தன்மையை தெரிவிக்கும் அளவு மேம்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆனால், இன்றைய நிலையில், பொதுமக்கள் தொடர்பு என்பதன் புரிதலானது, ஒரு வணிகம் அல்லது அரசு நடத்தப்படும் வழிமுறையை ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு செலுத்துவது என்பதாகும். கார்பரேட் கம்யூனிகேஷன் என்ற பதமும், பொதுமக்கள் தொடர்பு என்பதுடன் அதிகம் பொருந்தி வருகிறது. இன்றைய நிலையில், பல பெரிய நிறுவனங்கள், தங்களுக்கென தனி கார்பரேட் கம்யூனிகேஷன் குழுக்களை கொண்டுள்ளன. இதன்மூலம் மீடியா மற்றும் பொதுநல கேள்விகளை எதிர்கொள்ளும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

PR மற்றும் கார்பரேட் கம்யூனிகேஷன் பணி நிலைகள்

இப்பணி நிலைகளுக்கு வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தகுதிகள் உள்ளன. ஆனால் பொதுத் தகுதிகளாக, நல்ல எழுத்துத்திறன் மற்றும் பொது அறிவு போன்றவை தேவையாக உள்ளது. கார்பரேட் கம்யூனிகேடர் என்பவருக்கு, வாடிக்கையாளரின் வணிகம் பற்றியும், அது இயங்கும் சூழல் பற்றியும் தெளிவான அறிவு இருக்க வேண்டும் மற்றும் நடப்பு செய்திகள் மற்றும் சம்பவங்கள் பற்றி தெளிவான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பணியில் நிறைவேற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம்.

பல பொதுமக்கள் தொடர்பு அலுவலர்கள், பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து வருகிறார்கள். அவர்கள், வரலாறு, கணிதம், வேதியியல் மற்றும் மைக்ரோபயாலஜி போன்ற பாடங்களில் ஒரு பட்டத்தைப் பெற்றிருக்கலாம். இப்பணியைப் பொறுத்தவரை, நீங்கள் என்ன மற்றும் எங்கு படித்தீர்கள் என்பதைவிட, உங்களிடம் எந்தளவு மதிநுட்பம் இருக்கிறது என்பதே முக்கியம்.

Corporate Communication பணியைப் பொறுத்தவரை, பல நிறுவனங்கள், மீடியா அல்லது PR ஏஜென்சிகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்களையே எதிர்பார்க்கின்றன. சிறப்பான தகவல்தொடர்பு திறன் என்பதே இதன் அடிப்படைத் தேவை. ஆங்கில அறிவு, சிறப்பாக எழுதுதல் மற்றும் தெளிவாக விஷயங்களை வெளிப்படுத்தல் போன்றவை முக்கியமானவை. அதேசமயம், மீடியா எவ்வாறு செயல்படுகிறது என்ற அறிவானது, பல நிறுவனங்களால் விரும்பப்படும். மீடியாவைப் பற்றிய நல்ல புரிதலும், அறிவும் உள்ளவர்களுக்கு, இந்தத் துறையில் அதிக முக்கியத்துவம் உண்டு.

PR மற்றும் Corporate Communication தொடர்பான படிப்புகள்

இத்துறைகளில் அதிகளவிலான பணி வாய்ப்புகள் இருப்பதால், பல கல்வி நிறுவனங்கள், இத்துறை சார்ந்த, முதுநிலை டிப்ளமோ அல்லது முதுநிலைப் பட்டப் படிப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இப்படிப்புகளில், PR என்பதுடன், Advertising மற்றும் Corporate Communication போன்ற அம்சங்களும் கலந்துள்ளன. PR மற்றும் Corporate Communication ஆகிய தொழில்களில் ஈடுபட, அத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகள் தேவையில்லை என்று பல PR Practitioners சொன்னாலும், இப்படிப்புகளை மேற்கொண்டால், ஒருவர், தனது பணியில் உடனடி பயன்விளைவையும், செயலாக்க வெற்றியையும் பெற முடியும்.

Indian Institute of Mass Communication(IIMC), Xavier Institute of Communication, Symbiosis Institute of Mass Communication, School of Broadcasting and Communication(Mumbai) போன்ற நிறுவனங்கள், PR, Advertising and Corporate Communication தொடர்பான படிப்புகளை வழங்குவதில் புகழ்பெற்றவை. IIMC வட்டார அதிகாரி ஒருவர் கூறும்போது, "சில வருடங்களுக்கும் முன்பாக இந்தப் படிப்பை நாங்கள் தொடங்கும்போது, 25 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தார்கள். தற்போது 71 மாணவர்கள் படிக்கிறார்கள். வேலைவாய்ப்பு காலகட்டத்தின்போது, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம், மாணவர்களுக்கு, நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன" என்றார்.

இத்துறை படிப்புகளை வழங்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்களை தேர்வுசெய்ய, தனியான நுழைவுத்தேர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் நேர்முகத்தேர்வு போன்றவைகளை நடத்துகின்றன.

பணி வாய்ப்புகள்

படிப்பை முடித்தவுடன், ஒருவர், சிறப்பு PR ஏஜென்சியில் தனது பணியைத் தொடங்கலாம். இங்கே, மீடியா மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை குறித்த பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இந்த PR ஏஜென்சிகள், உங்களுக்கு நல்ல திறமையை அளித்து, பல இடங்களில் பணியாற்றும் சவாலை அளிக்கின்றன.

அதேபோல், Corporate Communications என்ற பணியில், ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் என்ற வகையில் ஒரு Brand -ஐ நீங்கள் சிறப்பாக பிரதிநிதிக்க வேண்டும். மீடியா துறையில் 3-4 வருடங்கள் அனுபவம் பெற்றவர்கள், இதுபோன்ற அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு பணியைத்தான் எதிர்பார்க்கின்றனர். ஒருவருக்கு எந்தப் பிரிவில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டறிய மற்றும் அவற்றில் ஆழமான அறிவைப் பெற PR ஏஜென்சிகள் உதவுகின்றன என்று அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர்.

பணியிலுள்ள சவால்கள்

இந்தியாவில் இந்த PR தொழில்துறையானது, இன்னும் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில் இருந்தாலும், செய்திகள், எழுதுதல் மற்றும் தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் நல்ல ஆர்வமுள்ள மணவர்களுக்கு இத்துறை வாய்ப்புகளை வழங்குகிறது. அடிப்படை மீடியா மேற்பார்வை, மீடியா தொடர்பு மற்றும் பிற அம்சங்களில் நடைமுறை திறமைகளை வளர்த்துக்கொள்ள PR படிப்புகள் துணைபுரிகின்றன.

இத்துறையின் தொடர்புடைய பணிகளை இன்டர்ன்ஷிப் மற்றும் ப்ராஜெக்ட் மூலமாக செய்ய வேண்டியிருக்கும்.

சவால்கள், நெருக்கடிகள் மற்றும் நீண்டநேரம் பணிசெய்தல் ஆகியவற்றை ஒரு PR அதிகாரியால் சமாளிக்க முடியவில்லையெனில், அவரின் நிலைமை கஷ்டம்தான். அதிகளவு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரங்களும் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே, PR மற்றும் Corporate Communication ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள், இதுபோன்ற சவால்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களால் முடியாது என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்வது நல்லது.

அதேசமயம், இந்தத் துறையில் கிடைக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும், திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் சிறப்பானவை மற்றும் நிகரில்லாதவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us