தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பே ரோல் துறை தொடர்பான படிப்புகள்

பே ரோல் துறை தொடர்பான படிப்புகள்

பே ரோல் துறை தொடர்பான படிப்புகள்


பிப் 22, 2012 12:00 AM

பிப் 22, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 22, 2012 12:00 AM பிப் 22, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகில் எத்தனையோ துறைகளைப் பற்றிய படிப்புகள் இருந்தாலும், சில துறைகளின் படிப்புகள் வித்தியாசமானவை. அந்த வரிசையில் வருவதுதான் PAYROLL துறை படிப்பு.

உலகின் முக்கிய பொருளாதார சக்தியுடைய நாடுகளின் அரசுத் துறைகளை மேலாண்மை செய்வதற்கான நிர்வாக அமைப்புகள் இருப்பது இயல்பே. அந்தவகையில், ஒரு நாட்டு அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களுக்கான சம்பள விபரங்களை நிர்வகிக்கும் துறையும்(Payroll Profession) விதிவிலக்கல்ல.

இத்துறையை நிர்வகிக்கும் மனிதவளத்தை உருவாக்க, Payroll தொடர்பான படிப்புகளை வழங்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்தியாவிலேயே முதன்முறையாக வழங்கப்படும் Payroll தொடர்பான படிப்புகள் பற்றியும், அதை வழங்கும் நிறுவனம் பற்றியும் அறியலாம். 

இந்தத் துறை பிரிட்டனில் CIPP என்றும், அமெரிக்காவில் APA என்றும், கனடாவில் CPA என்றும் அழைக்கப்படுகின்றன. அந்தவகையில், இந்தியாவிலும், NAIP - National Academy of Indian Payroll என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, இந்தியாவானது Payroll தொழில்முறை இயக்கத்தில் இணைந்துள்ளது.

இந்த NAIP, பிரிட்டனின் IPP -உடன் இணைந்து, Payroll பயிற்சியாளர்களுக்கு மட்டுமின்றி, Accountants, Entrepreneurs மற்றும் HR managers உள்ளிட்ட பலதரப்பட்டோருக்கும் தகுதிகளையும், பயிற்சிகளையும் வழங்குகின்றன.

சிறந்த பணியாளர் மேலாண்மை மற்றும் அவர்களுக்கான ஊதியம் போன்றவை, எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு முக்கியமான செலவு நடவடிக்கையே. ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட வேண்டுமெனில், மேற்கூறிய துறை வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

இத்துறையில் மேற்படிப்பை மேற்கொண்டு, நல்ல நிலையை அடைய விரும்புபவர்களுக்கு தேவைப்படும் தகுதிகளை NAIP வழங்குகிறது. முதுநிலை டிப்ளமோ படிப்பு இதில் முக்கியமானது. இந்த தகுதி நிலைகள் பிரிட்டனின் CIPP -ஆல் அங்கீகரிக்கப்படுகின்றன.

தேவையான தகுதி நிலையை அடைந்த ஒருவர், NAIP -ன் முழு தொழில்முறை உறுப்பினராக அங்கீகரிக்கப்படுகிறார். அதன்பிறகு அவர், இத்தொழிலுக்கான தகுதியுடையவராக ஆகிறார். NAIP உறுப்பினர் ஆனவுடன், ஒருவருக்கு IPP -ன் உலகளாவிய உறுப்புத்துவமும் கிடைக்கிறது.

NAIP பணிகள்

* இந்திய Payroll தொழிலின் தேசிய நிர்வாக அமைப்பாக இருப்பது NAIP.

* இந்திய Payroll தொழில்துறைக்கு தேவையான கல்வித்தகுதி, பயிற்சிகள் மற்றும் இதர தொழில்முறை தகுதிகளை வழங்கி வருகிறது.

* இந்திய Payroll தகுதிகள் மற்றும் பயிற்சிகளுக்கான ஒரு தொழில்முறை வரையளவாக NAIP இருக்கிறது.

* உலகளாவிய Payroll தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக NAIP இருக்கிறது.

* இந்தியாவின் வரிவிதிப்பு மற்றும் Payroll துறை தொடர்பாக அரசு வகுக்கும் வியூகத்தில் முக்கிய பங்காளராக NAIP இருக்கிறது.

* Payroll தொடர்பான மாநாடுகள், கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தொடர்பான மாநாடுகளை நடத்துவதில் NAIP முக்கியப் பங்கு வகிக்கிறது.

NAIP வழங்கும் படிப்புகள்

Payroll & Payroll Compliance Management என்பதில் வழங்கப்படும் முதுநிலை டிப்ளமோ படிப்பானது, இந்தியா மற்றும் பிரிட்டனின் தனியார் மற்றும் பொதுத்துறைகளைச் சார்ந்த Payroll மற்றும் HR நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, மேம்படுத்தப்பட்டுள்ளது.

இத்துறை சார்ந்து, இந்தியாவிற்குள் வழங்கப்படும் இந்தவகைப் படிப்பில் இது முதலாவதாகும். இப்படிப்பின் பாடத்திட்டமானது, Payroll நுட்பக்கூறுகள், இயைந்த விதிமுறைகள், மேற்பார்வை மற்றும் மேலாண்மைத் திறன்களை விரிவான முறையில் வழங்குகிறது. இது ஒரு தொலைநிலைப் படிப்பாகும்.

தொலைநிலைக் கல்வி

NAIP வழங்கும் தொலைநிலைப் படிப்பானது, 3 பிரிவுகளாகப் (Payroll and payroll Compliance படிப்பில் அடிப்படை சான்றிதழ் - பகுதி - (A), Payroll administration and Compliance துறையில் Advanced சான்றிதழ் - பகுதி - (B) மற்றும் Payroll Management -ல் சான்றிதழ் படிப்பு - பகுதி - (C)) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு தனிவகையான தகுதியை வழங்குகிறது மற்றும் அந்த 3 தகுதிகளும் இணைந்து, இறுதியில் Payroll Compliance Management என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ என்ற கல்வித் தகுதியை வழங்குகின்றன.

பல பிரிட்டன் பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படும் e-learning portal -ஐ, NAIP பயன்படுத்துகிறது. மேலும், இந்நிறுவனம் வழங்கும் தொலைநிலைக் கல்வி முறையில் பல நவீன அம்சங்கள் பின்பற்றப்படுகின்றன. இதனால், ஒரு மாணவர் எங்கு வேண்டுமானாலும், தனக்கான படிப்பு ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தவகைப் படிப்புகளுக்கான கால அளவு, கட்டணம் மற்றும் தன்மைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும், படிப்புகள் தொடர்பாக வேறுபல அனைத்து விபரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் http://www.naip.in/qualifications.php என்ற இணையதளம் செல்க.

பயிற்சிகள்

Essential payroll affecting pension and provident fund, Essential payroll affecting employee state insurance, Essence of payroll and statutory compliance, Procedure for  filing returns affecting payroll by state and Essential payroll and taxation போன்ற பல வகைகளில் Workshop பயிற்சிகளை வழங்குகிறது. இவைப்பற்றிய விரிவான விபரங்களுக்கு http://www.naip.in/training.php என்ற இணையதம் செல்க.

இந்த அமைப்பை பற்றி பிற அனைத்து விரிவான விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.naip.in/index.php என்ற இணையதளத்தை அணுகவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us