தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களை ஈர்க்கும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்....

மாணவர்களை ஈர்க்கும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்....

மாணவர்களை ஈர்க்கும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்....


மார் 15, 2012 12:00 AM

மார் 15, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 15, 2012 12:00 AM மார் 15, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு விமானத்தை, மேலேற்றுதல் மற்றும் இழுத்தல் ஆகிய பணிகளைச் செய்யும் ஆற்றல் பற்றி முந்தைய விஞ்ஞானிகள் ஆராயவில்லை என்றால், நாம் இன்று பறக்க முடியாது.

பறத்தல் தொழில்நுட்ப முன்னோடிகளின் அடியொற்றி, அத்துறையில் மேலும் சாதிக்க நாம் விரும்பினால், B.Tech., Aerospace Engineering படிப்பை மேற்கொள்ளலாம். விமானம் மற்றும் விண்வெளி ஓடத்தின் அறிவியல், கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஆகியவை தொடர்பானது இந்தப் படிப்பு. இது மேலும் Aeronautical engineering மற்றும் Astronautical engineering என்று 2 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. Aeronautical engineering என்பது புவியின் சூழலுக்குள் இருக்கும் வானூர்தி தொடர்பானது, Astronautical engineering என்பது புவிச்சூழலுக்கு வெளியே இயக்கப்படும் வானூர்தி தொடர்பானது.

Aerospace Engineering படிப்பில் சிறந்து விளங்க, ஒரு மாணவன், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகியப் பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும். Aerospace Engineering படிப்பை மேற்கொள்ளும் ஒரு  மாணவர் என்ற முறையில் ஒருவர், Fluid Mechanics, Astrodynamics, Statics and Dynamics, Control engineering, Materials Science ஆகியவற்றைப் பற்றி படிப்பார்.

Aerospace Engineering பட்டதாரிகள், பொதுத்துறை, பாதுகாப்பு மற்றும் வான்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிகளைப் பெறுகிறார். HAL, NAL, DRDO போன்ற நிறுவனங்கள் அவற்றில் சில உதாரணங்கள். GE, Satyam, Infosys போன்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல நல்ல வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஒரு Aerospace Engineering பட்டதாரி, ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.18000 முதல் ரூ.25000 வரை பெறுகிறார்.

Aerospace Engineering பாடங்கள்

Flight Mechanics, Aerodynamics, Thermal & Propulsion, Structure & Design

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us