தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மனதை ஒருமுகப்படுத்தும் யோகாசன படிப்பு

மனதை ஒருமுகப்படுத்தும் யோகாசன படிப்பு

மனதை ஒருமுகப்படுத்தும் யோகாசன படிப்பு


ஏப் 19, 2012 12:00 AM

ஏப் 19, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 19, 2012 12:00 AM ஏப் 19, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. சரியாக வாழும் கலை, அல்லது உடல், மனம், ஆன்மாவின் நலனுக்கான ஒருங்கிணைந்த அமைப்பு. யோகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்குப் பல பொருள்கள் உண்டு. அது யுஜ் என்ற சமஸ்கிருத வேரிலிருந்து பெறப்பட்டது. அதன் அர்த்தம் கட்டுப்படுத்தவது, கட்டுவது, சேர்ப்பது.

முனிவர் பதஞ்சலிதான் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். அவர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யோக சூத்ராவை எழுதினார். அவர் எட்டு விதமான யோக ஒழுங்குகளின் கொள்கைகளை முழுமையாக விளக்கினார். இந்த விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்துத் தந்தார். யோக சூத்ரா தான், யோகாசனம் பற்றி முக்கியமான மற்றும் அடிப்படை நூல். இத்தத்துவங்களை வைத்துதான் யோகாசனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது.

யோகா, இந்தியாவில் உருவாக்கப்பட்டது. உடல் மற்றும் மன ஒழுங்குகளைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குகளால் எட்டப்படும் இலக்குகளைக் குறிக்கிறது. இந்து சமய தத்துவ மரபின் ஆறு பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது. யோகத்தின் முக்கிய வழிகள் ராஜ யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, பக்தி யோகா, ஹட யோகா முதலியவை.

பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் பதிவு செய்யப்பட்ட ராஜ யோகாதான், இந்து தத்துவ மரபில் யோகா என்றே எளிமையாகக் குறிப்பிடப்படுகிறது. இது சாம்யக்யா மரபைச் சார்ந்தது. மொத்தம் 196 சூத்திரங்கள் உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சிவசம்ஹிதா, இன்னும் பல நூல்கள் யோகா அம்சங்கள் பற்றி பேசுகின்றன. 

படிப்புகள்:
பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.பில்., மற்றும் பிஎச்டி., ஆகிய படிப்புகளாக யோகா கற்பிக்கப்படுகிறது. பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலைப் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்:
யோகா படித்தவர்கள், சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் மக்களின் வலிமை, சிந்திக்கும் ஆற்றல், உடலளவில் புத்துணர்ச்சி, நல்ல எண்ணம் ஆகியவை வலுப்பெறும். யோகா பயிற்சியாளர் தவிர, யோகா ஆசிரியர், யோகா சிகிச்சை நிபுணர், உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர் மற்றும் யோகா பேராசியர் ஆகிய பணிகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் யோகா படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

கல்வி நிறுவனங்கள்:
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
* தீன் தயாள் உபத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்
* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
* ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி
* சென்னை பல்கலைக்கழகம்
* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us