தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் படிக்கத் தயாரா?

பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் படிக்கத் தயாரா?

பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் படிக்கத் தயாரா?


ஏப் 26, 2012 12:00 AM

ஏப் 26, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 26, 2012 12:00 AM ஏப் 26, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேஷன் மற்றும் டெக்ஸ்டைல் துறையில் ஏராளமான இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

படிப்பின் வகைகள்

* Fashion designing
* Textile design and development
* Accessory designing
* Garment manufacturing technology
* Apparel marketing and merchandising
* Leather and garment design and technology
* Knitwear design and technology
* Fashion journalism and presentation

தகுதி

இளநிலைப் படிப்பில் சேர, பள்ளி மேல்படிப்பை, 50% மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அதேசமயம், நீங்கள் ஏற்கனவே பட்டம் பெற்றிருந்தால், முதுநிலைப் படிப்பில் சேர முடியும்.

சேர்க்கை

பலவிதமான கல்வி நிறுவனங்கள், எழுத்துத் தேர்வு, சூழ்நிலைத் தேர்வு, ஸ்டுடியோ தேர்வு, போர்ட்போலியோ மதிப்பாய்வுகள், வடிவமைப்பு திறனாய்வுத் தேர்வு, பணிப் பட்டறைகள், குழு விவாதங்கள் மற்றும் தனிநபர் நேர்முகத் தேர்வுகள் போன்றவைகளை நடத்துகின்றன.

மேலும், NEED/DAT, GATE, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளும், பல கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

தயாராதல்

நீங்கள் Specialise செய்ய விரும்பும் பகுதிக்கு ஏற்ப நீங்கள் தயாராக வேண்டும். வடிவமைப்புத் துறையைப் பொறுத்தவரை, படைப்புத் திறனும், புத்தாக்க முயற்சியும் உங்களை உயர்ந்த இடத்தில் நிறுத்தும். வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில், நல்ல பேச்சுத்திறனும், விளக்கப்படுத்தல் திறனும் கைகொடுக்கும்.

உற்பத்தி மற்றும் தர நிர்ணய நிலைகளில், பகுப்பாய்வு திறன் உதவும். எனவே, ஒரு குறிப்பிட்டப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ளவும்.

Academy of fashion and design போன்றவை, NIFT, NID and CEED போன்ற கல்வி நிறுவனங்களில், நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கின்றன. மேலும், பிற கல்வி நிறுவனங்களிலும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளை அவை அளிக்கின்றன. நுழைவுத் தேர்வுகளுக்கான பாட உபகரணங்கள், நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு, தேவையான நேரத்தில், அவற்றில் மாற்றங்களும் செய்யப்படுகின்றன.

படிப்பின் காலம்

நீங்கள் மேற்கொள்ளும் படிப்பைப் பொறுத்து, 6 மாதம் முதல் 3 வருடங்கள் வரை படிப்பின் காலஅளவு வேறுபடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us