தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பற்றி அறியுங்கள்!

மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பற்றி அறியுங்கள்!

மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பற்றி அறியுங்கள்!


ஏப் 28, 2012 12:00 AM

ஏப் 28, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 28, 2012 12:00 AM ஏப் 28, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மெட்டலர்ஜி என்பது, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை தொடர்பான துறையாகும். இது, மெட்டலிக் அம்சங்களின் பெளதீக மற்றும் ரசாயனப் பண்புகளையும், அதன் உள்மெட்டலிக் இணைப்புகள் மற்றும் அதன் கலப்புகள் ஆகியவைப் பற்றி ஆய்வு செய்கிறது.

அனைத்துவிதமான மெட்டல் தொடர்பான பகுதிகளையும் கொண்டு, ஒரு பரந்துபட்ட துறையாக மெட்டலர்ஜி பொறியியல் விளங்குகிறது. பிசிக்கல் மெட்டலர்ஜி, பிரித்தெடுக்கும் மெட்டலர்ஜி மற்றும் மினரல் ப்ராசஸிங் போன்றவை அத்துறையின் 3 பெரும் பிரிவுகளாகும்.

பிசிக்கல் மெட்டலர்ஜி என்பது சிக்கல் தீர்த்தல் செயல்பாட்டில் பயன்படுகிறது. பல்வேறுவிதமான உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் மெட்டாலிக் கூட்டமைப்பு வகைகளை மேம்படுத்தலாம்.

பிரித்தெடுக்கும் மெட்டலர்ஜி தொழில்நுட்பம் என்பது, தாதுக்களிலிருந்து மெட்டலை பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

புவி மேலோட்டில் இருந்து தாதுப் பொருட்களை சேகரிக்கும் செயல்பாட்டில் மினரல் ப்ராசஸிங் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

மெட்டலர்ஜிகல் பொறியியல் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படிக்கும் ஒருவர், மேற்கூறிய 3 துறைகளைப் பற்றிய அடிப்படைகளைப் படிப்பதோடு, பொதுவான பொறியியல் பாடத்தையும் படிப்பார்கள்.

நமது சமூகம் இயங்க நமக்கு உலோகங்கள் தேவை. கார்கள், பைக்குகள், விமானங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களின் முக்கியப் பகுதி பொருளாக உலோகம் உள்ளது. எனவே, இத்தகைய உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் வடிவமைத்தல் ஆகிய செயல்பாட்டைப் பற்றிய அறிவையும், திறமையையும் பெற்றிருக்கும் ஒருவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

உற்பத்தி தொடர்பாக எழும் பிரச்சினைகளை தீர்த்தல், மெட்டல் பகுதிகளை வடிவமைத்தல் மற்றும் மெட்டல் பண்புகளை ஆராய்தல் போன்ற பல விஷயங்களை மெட்டலர்ஜிகல் பொறியியல் கற்றுத் தருகிறது. இதைத்தவிர, வெவ்வேறுவிதமான உலோகங்களை சோதனை செய்தல், சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் பிற நிலைகளைப் பற்றியும் இத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

மெட்டலர்ஜி நிபுணர்கள் என்பவர்கள், தாதுக்களை கையாளுதல் மற்றும் புதிய கூட்டிணைவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள். மேலும், வெவ்வேறு வகையான உலோகங்களின் செயல்பாட்டிற்கான புதிய முறைகளையும் உருவாக்குகிறார்கள்.

மெட்டலர்ஜி படிப்பை தமிழகத்தில் வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

* என்.ஐ.டி - திருச்சி

* பி.எஸ்.ஜி. டெக்னாலஜி - கோவை

* அரசு பொறியியல் கல்லூரி - சேலம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us