தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நல்ல அனுபவம், அதிக வருமானம் - பேஷன் ஜர்னலிசம்!

நல்ல அனுபவம், அதிக வருமானம் - பேஷன் ஜர்னலிசம்!

நல்ல அனுபவம், அதிக வருமானம் - பேஷன் ஜர்னலிசம்!


ஏப் 28, 2012 12:00 AM

ஏப் 28, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 28, 2012 12:00 AM ஏப் 28, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேஷன் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி, இன்றைய நிலையில், செய்தித்தாள்கள், இதரப் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகியவற்றில் அதிகளவில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன. இந்த புதிய சூழ்நிலையானது, பேஷன் ஜர்னலிசம் என்ற ஒரு புதிய துறை உருவாக காரணமாக அமைந்துள்ளது. பேஷன் பற்றி பெரியளவில் ரிப்போர்ட் செய்வது மற்றும் எழுதுவது பேஷன் ஜர்னலிசம் எனப்படும்.

பேஷன் ஜர்னலிஸ்ட் என்பவர்கள், பேஷன் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழுதுதல், எடிட் செய்தல் மற்றும் ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். இத்துறையில் சிறந்து விளங்க, கவர்ச்சி மற்றும் பேஷன் தொடர்பான நல்ல அறிவைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், தற்போது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரியளவில் பேஷன் தொழில்துறை வளர்ந்துவருவதால், அதைப்பற்றிய பரந்த மற்றும் விரிவான புரிதல் அவசியமாகிறது.

பேஷன் ஜர்னலிச பணியின் தன்மைகள்

பேஷன் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை சேகரித்தல், லைப் ஸ்டைல் மற்றும் பேஷன் டிரண்டுகள் தொடர்பாக எழுதுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தப் பணியாகும். ஒப்பனை(make-up) செய்தல், ஆடைகள் மற்றும் பலவிதமான பாவனைகள் குறித்து பேஷன் ஜர்னலிஸ்ட் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இத்துறையைப் பற்றி தெரிந்த ஒருவர், வெறும் பேஷன் ஜர்னலிஸ்ட் என்ற நிலையில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளத் தேவையில்லை. வேறுபல பணி வாய்ப்புகளும் உள்ளன. பேஷன் விமர்சகர், தொலைக்காட்சிகளில் லைப்ஸ்டைல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மற்றும் இணையத்தில் ஒரு பேஷன் பிளாக்கை(blog) வைத்திருப்பவர் என்பது உள்ளிட்ட வாய்ப்புகளையும் பெறலாம்.

இவைத்தவிர, பேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் உங்களின் திறமையைக் காட்டலாம். மேலும், இத்துறையில் ப்ரீலேன்சிங் முறையிலும் பணியாற்றலாம். ஆனால், அதற்கு, துறைரீதியாக நல்ல அனுபவம் தேவை.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

* National Institute of Fashion Technology(NIFT) - New Delhi

* Indian Institute of Journalism and New Media - Bangalore

* Asian college of Journalism - Chennai

* Mudra Institute of communication - Ahmedabad

* BD Somani Institute of Art and Fahion Technology - Mumbai

* Manorama school of communication - Kottayam

* Indian Institute of mass communication - New Delhi

தகுதிகள்

பேஷன் தொடர்பான தனியாத ஆர்வமும், நல்ல எழுத்துத் திறனும் உள்ள ஒருவர், பேஷன் ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஒருவர் பேஷன் ஜர்னலிசத்தில் படிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வழக்கமான ஜர்னலிச படிப்போடு, தேவைப்படும் ஆற்றலும் இருந்தால் நீங்கள் நினைத்ததை அடையலாம். மேலும், இதற்கென தனிப்பயிற்சியும் பெற்றால், நீங்கள் சிறப்பான ஏற்றத்தைப் பெறுவீர்கள்.

சம்பளம்

இத்துறையில், ஆரம்ப நிலையில் ஒருவர், வருடத்திற்கு சுமார் 2 லட்சம் அல்லது அதற்குமேல் சம்பாதிக்கலாம். இது ஒரு படைப்பாக்கத்துறை என்பதால், ஒருவரின் தனித்திறன் மற்றும் அவரின் அனுபவத்தைப் பொறுத்து அவரின் சம்பளம் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லும். எனவே, இத்துறையைப் பொறுத்தவரை, அவரவர் திறனைப் பொறுத்து பலன் அமைகிறது.

பொதுவான ஆலோசனைகள்

இத்துறையில் வெற்றிபெற, ஒருவருக்கு, தனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை நேர்த்தி மற்றும் நயத்துடன் வெளிப்படுத்தும் திறமை இருக்க வேண்டும். மக்களின் மனநிலையை உணர்ந்து, இத்துறை தொடர்பான வாசிப்பாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதுவது, பேஷன் ஜர்னலிஸ்டுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய திறமையாகும்.

எதை வாங்கலாம், எது பொருத்தமாக இருக்கும் மற்றும் எது சமீபத்திய மற்றும் சிறந்த வரவு என்பதைப் பற்றி ஆலோசனை வழங்கப்படுவதை, மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

எனவே, மேற்கூறிய தேவைகளை நிறைவுசெய்ய தயாராக இருப்பவர்கள், இந்தத் துறையில் நிச்சயம் வெற்றிக்கொடியை நாட்டுவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us