தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கல்வி ஆலோசகராக விருப்பமா?

கல்வி ஆலோசகராக விருப்பமா?

கல்வி ஆலோசகராக விருப்பமா?


மே 12, 2012 12:00 AM

மே 12, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 12, 2012 12:00 AM மே 12, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய நவீன உலகில் படிப்பதற்கு என்று பல ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. பள்ளிக் கல்வியில் நான்கைந்து பிரிவுகளாக இருக்கும் இந்தப் பாதைகள், கல்லூரிக்குச் செல்லும் போது நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்ட பிரம்மாண்ட மரமாக உருவெடுத்து விடுகிறது.

இதில் எந்தப் படிப்பை தேர்வு செய்வது என்பதே இன்றைக்கு மாணவர்களின் முன்னிருக்கும் பிரம்மாண்டக் கேள்வி. இதற்கு விடையளிக்கும் நபர்தான் கல்வி ஆலோசகர். ஒரு சிறந்த கல்வி ஆலோசகராக ஒருவர் உருவெடுப்பதற்கு என்னென்ன பண்புகள் தேவை, என்ன கல்வித் தகுதி வேண்டும், அவருக்கான வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்... மாணவர்களுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் கல்வி ஆலோசகரின் பணி மகத்தானதாக கருதப்படுகிறது. மாணவர்களின் திறமை, விருப்பம், நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்ற படிப்பை கண்டறிவதே கல்வி ஆலோசகரின் பணியாகும்.

இதன் பின்னர் மாணவர்கள் தேர்வு செய்த படிப்பில், அவர்களை முன்னேறச் செய்வதும் கல்வி ஆலோசகரின் கடமையே. கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றிய அபரிமிதமான அறிவு, படிப்புகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப பணிகள், உதவித்தொகை தொடர்பான விவரங்கள் மட்டுமின்றி, படிப்புக்குப் பின்னர் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பான விஷயங்களிலும் கல்வி ஆலோசகருக்கு சிறப்பான புரிதலும், அறிவும் இருக்க வேன்டும்.

இதுமட்டுமின்றி, மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையிலான Time management, Stress Management, Effective Study Habits விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கான படிப்பை தேர்வு செய்து கொடுப்பதுடன் நின்றுவிடாமல், பள்ளி, கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம், மாணவர்களின் முன்னேற்றம் பற்றி கலந்தாலோசிக்க வேண்டியதும் கல்வி ஆலோசகருக்கு உண்டான பொறுப்புதான்.

கல்வித் தகுதி: ஒரு கல்வி ஆலோசகராக கல்வியியல், சமூகவியல் மற்றும் உளவியல் படிப்புகளில் நல்ல தேர்ச்சியுடன், கவுன்சலிங் அல்லது வாழ்க்கைக் திறன் பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருப்பது நல்லது.

கல்வி ஆலோசக்ருக்கான படிப்புகளை ஆன்-லைன் மூலம் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களூம் இருக்கின்றன. இதுமட்டுமின்றி சிறப்பான தொடர்புத் திறன் (Communicative Skill), மாணவர்களுடன் நல்ல ஒத்துணர்வு, நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிப்பது போன்ற தகுதிகளும் அவசியம்.

கல்வி ஆலோசனையுடன் நின்றுவிடாமல், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள புதிய வேலைவாய்ப்புகள், அதிகளவில் ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள், சிறந்த வேலைவாய்ப்பு நிறுவனங்கள் போன்ற விஷ்யங்களில் நல்ல அனுபவமும் தேவை.

வேலைவாய்ப்பு: பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள், வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை மையங்கள் போன்றவற்றில் திருப்திகரமான வேலைவாய்ப்பை கல்வி ஆலோசகரால் எளிதாகப் பெறமுடியும். சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு முழுநேர கல்வி ஆலோசகரை நியமிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதால், இனி வரும் காலங்களில் கல்வி ஆலோசகருக்கு நல்ல மவுசு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

எங்கு படிக்கலாம்: டெல்லியில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT), International Diploma in Guidance & Counselling படிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தில் M.A. Career Counselling படிப்பு வழங்கப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கர்நாடகாவில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகம், நொய்டாவில் உள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல் நிறுவனங்களில் கல்வி ஆலோசகருக்கான படிப்பு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us