தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எளிதில் முடிக்கும் படிப்புதான்! ஆனால் வாய்ப்பும், வருமானமும் ஏராளம்!

எளிதில் முடிக்கும் படிப்புதான்! ஆனால் வாய்ப்பும், வருமானமும் ஏராளம்!

எளிதில் முடிக்கும் படிப்புதான்! ஆனால் வாய்ப்பும், வருமானமும் ஏராளம்!


ஜூன் 13, 2012 12:00 AM

ஜூன் 13, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 13, 2012 12:00 AM ஜூன் 13, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகுக்கலைத் தொழிலானது, வருடத்திற்கு 20% வரை வளர்ச்சியடைந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்களுக்கு இந்திய சந்தை திறக்கப்பட்ட நிகழ்வாக ஆரம்பித்த இத்தொழில், ஹாஸ்பிடாலிடி, தொலைக்காட்சி, பேஷன் நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங் போன்ற பலவித வாய்ப்புகளை இன்று தாங்கி நிற்கிறது. படிப்புத் தகுதி குறைவான நபர்களும், பெரியளவில் சாதிப்பதற்கான துறை இது.

படிப்புகளின் வகைகள்

அழகுக்கலை படிப்பு, பொதுவாக 2 பிரிவாக பிரிக்கப்படுகிறது. அதில் ஒருவகை, பெரிய, புகழ்பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படுபவை. Salon chains like Shahnaz Hussain, VLCC and Christine Valmy International school of Esthetics போன்ற நிறுவனங்கள், அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகள் பொதுவாக, 2 முதல் 3 வருடங்கள் வரையான காலத்தைக் கொண்டவை. ஆனால், Beauty brands மற்றும் Salon chains போன்றவை வழங்கும் படிப்புகள், 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை நீளக்கூடியவை. அதேசமயம், அரசு கல்வி நிறுவனகள் மலிவானவை. கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அழகுக்கலை படிப்புகளின் காலஅளவு நீண்டது என்பதால், அந்தப் படிப்புகளும் விரிவான தன்மையைக் கொண்டவை.

கற்பிக்கப்படும் அம்சங்கள்

நாம் கற்கும் விஷயங்கள், கல்வி நிறுவனம் மற்றும் நாம் தேர்ந்தெடுக்கும் பாடங்கள் ஆகியவற்றைப் பொறுத்தது என்றாலும், ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். அழகுக்கலை என்பது வெறுமனே, நகப்பூச்சு போடுதல், மெழுகுப் பூச்சு மற்றும் கூந்தல் சரிசெய்தல் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. காஸ்மெடாலஜி(முகம், முடி மற்றும் தோலை அழகுப்படுத்தல்), உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, Self-grooming, Corporate-grooming மற்றும் சமூக ஆசார முறை போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய விரிவான வாய்ப்புகள் உள்ளன.

காஸ்மெடாலஜி துறையில், 2 வருட எம்.எஸ்சி படிப்பை, ஹைதராபாத்திலுள்ள IBS என்ற கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற படிப்பைத் துவங்கும் முதல் கல்வி நிறுவனம் நாங்கள்தான் என்று அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுவதாவது, "இந்தப் படிப்பை மேற்கொள்வோர், வெறுமனே அழகுக்கலை நிபுணர்களாக மட்டுமே பயிற்சியளிக்கப்படுவதில்லை. இப்படிப்பு, கிளீனிக்கல், சர்ஜிக்கல் மற்றும் மேலாண்மை தொடர்பாகவும் பயிற்சியளிக்கிறது" என்கிறார்கள்.

தொலைக்காட்சி மற்றும் கிளாமர் தொழில்துறை இன்று மிகப்பெரியளவில் வளர்ந்து வருவதால், மேக்-அப் கலைஞருக்கான தேவைகள் எங்கோ சென்றுவிட்டன எனலாம். முதலில், மாடல்களுக்கு மேக்-அப் போட ஆரம்பித்து, பின்னர், தொலைக்காட்சிக்கு சென்று, இறுதியில், சினிமாத்துறையில் நுழைய வேண்டும் என்பதே பலரின் லட்சியமாக இருக்கிறது. இந்த லட்சியத்தை அடைந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.

வாய்ப்புகள்

திறமையும், தகுதியும் வாய்ந்த ஒரு அழகுக்கலை நிபுணருக்கு, வானமே இல்லை எனலாம். உங்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப, பியூட்டி பார்லர்களில் நீங்கள் பணிபுரியலாம். மேலும், Corporate grooming, ஏர்லைன்ஸ், தொலைக்காட்சி சேனல்கள், விருந்தோம்பல் துறை ஆகிய பல நிலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதோடு, ப்ரீலேன்சிங் முறையிலும் பல வாய்ப்புகளைப் பெறலாம்.

அதேசமயம், உங்களுக்கு எழுத்துத் திறமை இருந்தால், பியூட்டி ஜர்னலிஸ்டாகவும் ஆகலாம். இதில் நல்ல வருமானம் பார்க்கலாம். "பியூட்டி கல்சர்" -இல் 4 மாத டிப்ளமோ படிப்பை முடித்தப்பிறகு, ஒருவர் மாதம் ரூ.7000 முதல் ரூ.8000 வரை பெறலாம். அதேசமயம், சிறப்பு படிப்பை முடித்து அனுபவம் பெற்ற ஒரு நபர், மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை பெறுவார்.

குறிப்பு

ASSOCHAM அமைப்பானது, காஸ்மெடிக் தொழிலின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 கோடி என்று கணித்துள்ளது. மேலும், வரும் 2014ம் ஆண்டில், அதன் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடியாக உயரும் என்றும் மதிப்பிட்டுள்ளது. ஏனெனில், வளரும் நகர்ப்புறங்களில் அதிகரிக்கும் இளைய தலைமுறையினரின், அபரிமிதமான வருமானம்தான். பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றுமொரு முக்கிய காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us