தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அழகுப் பொருட்கள் வடிவமைப்பு தொழிலில் சாதிக்க...

அழகுப் பொருட்கள் வடிவமைப்பு தொழிலில் சாதிக்க...

அழகுப் பொருட்கள் வடிவமைப்பு தொழிலில் சாதிக்க...


ஜூன் 02, 2012 12:00 AM

ஜூன் 02, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 02, 2012 12:00 AM ஜூன் 02, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதர்களைக் கவரும் மற்றும் அவர்களுக்குத் தேவையான எத்தனையோ விதமான அழகுப் பொருட்கள் இன்றைய நவீன உலக வாழ்வில் புலக்கத்தில் உள்ளன. காலில் அணியும் செருப்பு துவங்கி, தங்கம், வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த நகைகள், விலையுயர்ந்த கற்கள், வெள்ளிப் பொருட்கள், வீட்டு உபயோக மற்றும் வீட்டிற்கான அலங்கார பொருட்கள், குளியலறை மற்றும் சமையலறைப் பொருட்கள், விளக்கு மற்றும் ஒளி அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள், கண்ணாடிகள், கைக்கடிகாரம் மற்றும் சுவர் கடிகாரங்கள், பைகள், கூலிங் கிளாஸ்கள், இதர உடல் அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கு தேவையானப் பொருட்கள் என்று ஏராளமான விதங்களில், அழகுப் பொருட்களை வகைப்படுத்தலாம்.

அழகுப் பொருட்களுக்கான இன்றைய தேவை அதிகரித்து வருவதால், டிசைன் கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. புதிய டிரெண்டுகள் பற்றிய தகவல்கள் குறைந்தபட்சம் வருடத்திற்கு 4 முறை வழங்கப்பட வேண்டும். சிறந்த டிசைனர்களுக்கான மவுசு எப்போதுமே குறைவதில்லை.

உட்லேண்ட்ஸ் போன்ற தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், NID, NIFT, Pearl Academy and FDDI போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகள், பொதுவாக இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன. அழகுப் பொருள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருள் ஆகியவைதான் அவை.

ப்ராடக்ட் தொடர்பான படிப்புகள்

காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்பை, FDDI வழங்குகிறது. உட்புற பயன்பாட்டுப்(Interior) பொருட்களின் தேவை அதிகரிப்பதை தொடர்ந்து, Pearl கல்வி நிறுவனமானது, இதுதொடர்பான ஒரு சிறப்பு படிப்பை தனது நொய்டா வளாகத்தில் வழங்கவுள்ளது(இந்த வளாகம் இனிமேல்தான் முழுமை பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

தெற்கு டெல்லியிலுள்ள மகளிர் பாலிடெக்னிக், தங்க நகை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகியவற்றில் 3 வருட டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. Pearl -ன் ஜெய்ப்பூர் வளாகம் மற்றும் NIFT -ன் காந்தி நகர் வளாகம் ஆகியவை, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பான B Des படிப்பை வழங்குகிறது. வணிக முக்கியத்துவம் கருதி கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழிற் படிப்புகள், வேலை வாய்ப்பு மற்றும் போட்டிகள் நிறைந்த சந்தையில், ஒருவரின் திறனை அதிகரித்து, அவர் தனக்கான இடத்தைப் பெறுவதில் உதவி புரிகின்றன.

மூலப்பொருட்கள்

அழகுப் பொருட்கள் தயாரிப்பில், பலவிதமான பொருட்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. தோல், சணல், கேன்வாஸ், களிமண், துணி வகைகள் மற்றும் உலோகங்கள் உள்ளிட்டவை அவற்றுள் குறிப்பிட்டத்தக்கவை. ஜெய்ப்பூரிலுள்ள The Indian institute of craft and design என்ற கல்வி நிறுவனம், இந்திய கைவினைப் பொருட்கள் தொடர்பான பேரார்வம் கொண்ட மாணவர்களுக்கான ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. ஏனெனில், இந்திய கைவினைப் பொருட்களுக்கு, இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பெரும் கிராக்கி உள்ளது.

ஒருவர் தனது ஆர்வத்திற்கேற்ப, Soft மெட்டீரியல்ஸ்(டெக்ஸ்டைல், லெதர், பேப்பர், இயற்கை துணிவகைகள்), Hard மெட்டீரியல்ஸ்(மர வகைகள், உலோகங்கள், கற்கள்) மற்றும் Fired மெட்டீரியல்ஸ்(செராமிக் எர்தன்வேர், ஸ்டோன்வேர், டெரகோட்டா, போர்சிலேய்ன்) ஆகிய மூன்று பிரிவுகளில் எதில் வேண்டுமானாலும் சிறப்பு படிப்புகளை மேற்கொள்ளலாம்.

பல கல்வி நிறுவனங்கள் தோல் தொடர்பான சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன.

சேர்க்கைப் பெறுதல்

அழகுப் பொருட்கள் டிசைன் படிப்புகளுக்கான பல நுழைவுத்தேர்வுகள், தற்போது முடிந்துவிட்டாலும், FDDI போன்ற கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜுன் மாதம் நடைபெறுகிறது மற்றும் விண்ணப்ப விற்பனை மே மாதத்துடன் நிறைவடைகிறது.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில், உங்களின் பொதுஅறிவு மற்றும் படைப்பாக்க திறன்களை நிரூபிக்க வேண்டியிருக்கும். பல வளாகங்களைக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள், எந்தப் படிப்பு மற்றும் வளாகத்தை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கவுன்சிலிங் வழங்குகின்றன.

பாடத்திட்டம்

டிசைன் கல்வி நிறுவனங்களில், பொதுவாக, முதல் வருடத்தில் வழங்கப்படும் பவுண்டேஷன் கோர்ஸ், அனைத்து பிரிவு படிப்புகளுக்கும் பொதுவானது. இதனையடுத்து, சிறந்த வடிவமைப்பு சிந்தனை மற்றும் தொழில்நுட்ப திறன்கள் தொடர்பான படிப்புகள் இருக்கும்.

சிறந்த அழகுப் பொருட்களை உருவாக்குவதென்பது, பணியின் தன்மைகளை மாற்றுவதிலும், கூட்டு பொருட்களை சேர்ப்பதிலும் அடங்கியுள்ளது. கூட்டுப் பொருட்களின் சேர்க்கையால் ஏற்படும் வினைகளைப் பற்றியும் அறிதல் அவசியம். இப்படிப்பில், நிபுணத்துவம் பெற, ஒருவர் கால-நேரம் பாராமல், ஆய்வகத்தில் பணிபுரிய வேண்டும். அப்போதுதான் பலவிதமான செயல்முறைகளை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகையப் பயிற்சியின் மூலமாக, ஒருவர் தனது முயற்சிகளை ஒருங்கிணைத்து, நேரத்தை சேமிக்க முடியும். நீண்டகால மற்றும் குறுகிய கால படிப்புகள், அவைகளின் தன்மையில் வேறுபடுகின்றன. குறுகியகால படிப்புகள், ஒரு மாணவரின் திறன்களின் மீதும், நீண்டகால படிப்புகள், ஒரு மாணவரின் வடிவமைப்பு சிந்தனையிலும் கவனம் செலுத்துகின்றன.

பணிவாய்ப்புகளும், சம்பளமும்

பிராண்ட், நிறுவனம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர், ஆண்டுக்கு 1.4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், டிபார்மென்ட் ஸ்டோர்கள், Established டிசைனர்கள், கிராப்ட் அமைப்புகள் மற்றும் டிசைன் கம்பெனிகள் ஆகிய அனைத்தும், அழகுப் பொருள் டிசைனர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. Titan, Matti designs, United colors of bennetton, Pantaloon, Superhouse group, Westside, Adidas, Reliance retail, Charbon, Swarovski, Tiffany, Liberty shoes, Gitanjali jewellery, VIP luggage, Tanishq, Impluse, Godrej, Kabir leathers and Lifestyle போன்றவை சில முக்கியமான வேலைவாய்ப்பு நிறுவனங்கள்.

சில்லறை மற்றும் வணிகம்(Retail and merchandising) என்பது இன்னொரு வகையாகும். வாங்குதல், விசாரித்தல் மற்றும் ஸ்டோர்கள், Kiosks மற்றும் ஈ-காமர்ஸ் போர்டல்களில்(portals) காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களை மேற்பார்வையிடல் போன்றவை மேற்கூறிய பணியில் அடங்கும்.

பின்னுள்ளதற்கு, தேடுதல் மற்றும் ப்ராடக்ட் விவரப் பட்டியலை மேலாண்மை செய்தல் போன்ற விஷயங்களில் உதவ அழகுப் பொருள் வடிவமைப்பாளர்கள் தேவை. கலைநுட்பத் திறன், மெட்டீரியல் அறிவு, வடிவமைப்பைப் பற்றிய புரிந்துணர்வு, கைவினைஞர்களுடனான அறிமுகம் ஆகியவை ஒரு அணிகலன் வடிவமைப்பாளருக்கு சிறப்பாக அமையுமானால், சந்தையில், அவருக்கான மதிப்பே தனி.

டிசைனருக்கான சிறப்பு பண்புகள்

அவ்வப்போது மாறும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் சந்தை நிலவரங்களை அறிவதில், எப்போதும் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். நல்ல ரசனை, படைப்புத்திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவை மிகவும் முக்கியம். தான் வடிவமைத்ததில், சுய திருப்தி மற்றும் பெருமை கொள்ளாமல், அவற்றை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை மட்டுமே எப்போதும் சிந்திப்பவராக இருக்க வேண்டும். இவையனைத்தையும் விட, இத்தொழிலின் மீதான காதல் மிகவும் முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us