தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பார்மா படிப்புகளைப் பற்றி அறிவோமா?

பார்மா படிப்புகளைப் பற்றி அறிவோமா?

பார்மா படிப்புகளைப் பற்றி அறிவோமா?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர், காற்று, உணவு போன்றவற்றுடன் மருந்துப் பொருட்களும் அத்யாவசியம் என்ற நிலை வந்துவிட்டது. அத்தகைய மருந்துகளை தயாரித்தல், பாதுகாத்தல், உரிய முறையில் வழங்குதல் போன்றவற்றை கற்றுத் தரும் படிப்பு பார்மசி அல்லது பார்மசூட்டிக்கல் எனப்படும்.

பி.பார்ம்., எம்.பார்ம்., என்ற பட்டப் படிப்புகள், டி.பார்ம்., என்ற டிப்ளமோ படிப்பு, டாக்டர் ஆப் பார்மசி (பார்ம்.டி.,) போன்ற படிப்புகள் இத்துறையில் உள்ளன.

இந்தியாவில் பார்மசியில் டிப்ளமோ (டி.பார்ம்.,) படித்திருந்தால் பார்மசிஸ்ட் என லைசென்ஸ் பெறலாம். மற்ற நாடுகளில் லைசென்ஸ் பெறுவதற்கு, குறைந்தது பி.பார்ம்., அல்லது பி.எஸ்.சி., பார்மசி போன்ற பட்டப் படிப்புகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ்2 விற்கு பின் பி.பார்ம்., படிப்பு 4 ஆண்டுகள் பயில வேண்டும். இந்தியாவில் 650 கல்லுõரிகள் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் அங்கீகாரம் பெற்ற பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

கலசலிங்கம் பல்கலைக்கழகம், வேல்ஸ் காலேஜ் ஆப் பார்மசி, ஆதிபராசக்தி காலேஜ் ஆப் பார்மசி, பி.எஸ்.ஜி.,காலேஜ் ஆப் பார்மசி, கே.கே.காலேஜ் ஆப் பார்மசி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் பார்மசி படிப்புகளை வழங்குகிறது.

தேசிய பார்மா சூடிக்கல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான நைபர் (National Institute of Pharmaceutical Education and Research) பல தரப்பட்ட முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us