தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புள்ளியியல் படிப்பில் உங்களுக்கு விருப்பமா?

புள்ளியியல் படிப்பில் உங்களுக்கு விருப்பமா?

புள்ளியியல் படிப்பில் உங்களுக்கு விருப்பமா?


அக் 26, 2012 12:00 AM

அக் 26, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 26, 2012 12:00 AM அக் 26, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்
துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட விவரங்களை விளக்க, புள்ளியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறை, புள்ளியியல் என அழைக்கப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள்தொகை அல்லது செயல்முறை பற்றி முடிவெடுக்க இந்த விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது அனுமானம் சார்ந்த புள்ளியியல் எனப்படுகிறது. விவரணை, முன்கணிப்பு மற்றும் அனுமானம் சார்ந்த புள்ளியியல் ஆகியவை இணைந்ததே பயன்பாட்டு புள்ளியில் எனப்படுகிறது.

புள்ளியியல் கோட்பாடுகளை ஆராயும் பிரிவு கணிதப் புள்ளியியல் என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, துல்லியமான நிகழ்தகவு முடிவுகளைக் கொண்டு ஆராயும் பிரிவு துல்லியப் புள்ளியியல் என்று அழைக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

பி.ஏ., (Applied Statistics)
எம்.எஸ்சி., (Applied Statistics)
பி.எஸ்சி., (Statistics)
எம்.எஸ்சி., (Statistics)
எம்.பில்., (Development Statistics)

இதைத்தவிர டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ ஆகியவற்றிலும் புள்ளியியல் படிப்பு வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

இத்துறை படித்தவர்களும் மத்திய அரசின் புள்ளியியல் துறையில் பணி வாய்ப்புகள் உள்ளன. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் பெரும்பாலான கல்லுõரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us