தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வேலையில்லா நிலை மாற வேண்டும்!

வேலையில்லா நிலை மாற வேண்டும்!

வேலையில்லா நிலை மாற வேண்டும்!


ஆக 04, 2016 12:00 AM

ஆக 04, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 04, 2016 12:00 AM ஆக 04, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய இளைஞர்களிடம், தொழிலதிபராக ஆகும் கனவும், ஆசையும் அதிகமாக இருந்தாலும், நம் நாட்டின் சூழ்நிலை அதற்கு உதவாததால் தான், ‘வேலைக்கு செல்வதே மேல்’ என்று நினைக்கின்றனர்!

தனியாருக்கு உரிய அந்தஸ்தும், மரியாதையும் வழங்கப்படவேண்டும். தனியார் நிறுவனங்கள் முன்னேற போதுமான திட்டங்களும், ஊக்கமும் வேண்டும். இத்தருணத்தில், அரசு நடத்தும் எந்த தொழிலாவது லாபம் அடைந்திருக்கிறதா? என்றால் இல்லை. அவை நஷ்டம் அடைவதற்கு, நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படாததும் ஒரு காரணம்.

இவற்றை உணர்ந்துதான், மாணவர்கள் தங்களது தொழில்முனைவோர் கனவை நனவாக்க விரும்பாமல், வேலை வழங்கும் படிப்பை நாடுகின்றனர். அதிலும் குறிப்பாக, செலவும் குறைவு, படிப்பு காலமும் குறைவு, வேலை வாய்ப்பும் எளிது என்கின்ற காரணங்களால் கலை மற்றும் அறிவியல் படிப்பை பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர்.

மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாக உள்ளது. பொறியியல் படிப்பும் மதிப்புள்ள, உயர்ந்த படிப்புதான். தேவையை விட, பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதால், பொறியியல் படிப்பின் மதிப்பு இன்று முழுமையாக உணரப்படவில்லை!

பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அவற்றில், பிரபல பாடப்பிரிவுகளில் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பும், ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பும், இவற்றிற்கு எல்லாம் ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதலும், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்க செய்துள்ளன.

இவ்வாறு அதிகரிக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. அதற்கு வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவில்லை. இதனை உணர்ந்தே, நமது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படிக்கும், ஐ.ஐ.டி., மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்று சென்றுவிடுகின்றனர். இந்த நிலைக்கு, மத்திய மற்றும் பல மாநில அரசுகள் தான் காரணம்!

நம் நாட்டில், வேலை இல்லாத நிலையைப் போக்க, ஆரம்பக் கல்வி முதலே தொழிற்கல்வி வழங்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் பள்ளி படிப்பை முடிக்கும்போது, குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கைத்தொழிலையாவது, கற்றுத்தேர்ந்திருக்க வேண்டும். அரசுகள், தங்களது கொள்கைப் பிடிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது, நிச்சயம் வேலை இல்லை என்ற நிலை இருக்காது!

-ஏ.கனகராஜ், தலைவர், ஜெயா கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us