தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சமச்சீர் தேசம் வேண்டும்!

சமச்சீர் தேசம் வேண்டும்!

சமச்சீர் தேசம் வேண்டும்!


ஆக 08, 2016 12:00 AM

ஆக 08, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 08, 2016 12:00 AM ஆக 08, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலை நிறைய சோறு, குழம்பு இல்லை, பொரியல் இல்லை, யோசியுங்கள்.
 
முகம் நிறைய முடி, மூக்கு இல்லை, முழி இல்லை, யோசியுங்கள்.

மூன்று தலை, பத்துகை, பலகால் எப்படி இருக்கும், யோசியுங்கள்.

சோறு உண்டு, தூக்கம் உண்டு, வீடு உண்டு, டிவி உண்டு ஆனால் வேலை இல்லை. சிறியமரம், பெரிய பெரிய பூக்கள் பார்க்க சகிக்காது.

அப்படித்தான் ஒரே துறையில் மட்டும் பல நிபுணர்கள் நிறைந்ததேசம். அது ஒரு பக்கம் மட்டும் வீங்கிய மூஞ்சி போல!

ஐ.டி., நிபுணர்கள் கூட பசித்தால் சாப்பிடுவார்கள், டீ குடிப்பார்கள், பார்ட்டி வைப்பார்கள், வீடு வாங்குவார்கள், வங்கியில் பணம் கட்டுவார்கள், வண்டி வாங்கி சர்வீஸ் செய்வார்கள், தோட்டம் வைப்பார்கள், நகை வாங்கி பரிசளிப்பார்கள், மொபைல் வாங்கி அமர்க்களம் செய்வார்கள்.

எல்லோருமே ஒரே துறையை தேர்வு செய்து, படித்தால் இவர்களுக்கு வீடு யார் கட்டித் தருவார்கள்? வண்டியார் ஓட்டுவார்கள்? பிள்ளைகளையார் குளிப்பாட்டுவார்கள், துணியார்தோய்ப்பார்கள், பிள்ளைகளை பள்ளியில் விட்டால் யார் பாடம் நடத்துவார்கள்? பாட்டு யார் சொல்லித்தருவார்கள்? யோசியுங்கள்...!

55 சதவீதம் மக்கள்தொகை இந்த நாட்டில் இப்போது சராசரி வயது 25 ஆகஇருக்கிறார்கள். இங்கே பிளம்பர், கார்பெண்டர், எலேக்ட்ரிசியன், டிரைவர், விற்பனை செய்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், வீடுகட்டுபவர்கள், வங்கியாளர்கள், திட்டநிபுணர்கள், நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மிஷின் ஆப்பரேட்டர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், சமூக களப் பணியாளர்கள், முக்கியமாக விவசாயிகள், எல்லை பாதுகாவலர்கள், போலீஸ், போக்குவரத்து ஊழியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் என்று இந்த பட்டியல் நீள்கிறது... இவர்கள் எல்லோருமே இருந்தால் மட்டுமே தேசம் செயல்படும்.

14 நாட்கள் கப்பல் வரவில்லை என்றால் இங்கே எந்த ஊர்தியும் ஓடாது. ஏனெனில் நமக்கு தொடர்ந்து நிலக்கரி மற்றும் பெட்ரோல் வந்தே ஆகவேண்டும். எல்லையில் யாரும் நிற்கவில்லை என்றால் நமக்கு அண்டை நாடுகளிலிருந்து எல்லை இல்லா பெருந்துன்பம் வந்து சேரும். விவசாயிகள் இனி கிடையாது என்றால் ஈரத்துண்டு தான் வயிற்றுக்கு. ஆசிரியர்கள் இல்லை என்றால் கல்விக் கூடங்கள் காலிக் கூடங்கள் ஆகிவிடும். சிந்திப்பவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் இருவருமே ஒரு நாட்டுக்கு தேவை!

‘திறன் இடைவெளி’ இந்த மாபெரும் தேசத்தில் வரக்கூடாது என்றால், சமச்சீர் தேசம் வேண்டும். அதற்கு அனைத்து துறையிலும் நிபுணர்கள், பணியாளர்கள் வேண்டும்! இந்த புரிதல் அனைவருக்கும் வேண்டும்!

-முனைவர் பாலசாண்டில்யன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us