தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நானே நானா யாரோ நானா?

நானே நானா யாரோ நானா?

நானே நானா யாரோ நானா?


மார் 27, 2017 12:00 AM

மார் 27, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 27, 2017 12:00 AM மார் 27, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று நிறைய இளைஞர்களுக்கு, தங்களையே பிடிப்பதில்லை. தங்களது உடலையே வெறுக்கும் நோய் அவர்களிடம் பரவி வருகிறது! சின்னச் சின்ன உடற்கோளாறுகள் எல்லோருக்குமே இயற்கையாக இருக்கத் தான் செய்கிறது. அது உண்மையில் பெரிய கோளாறோ அல்லது உடல் ஊனம் போன்ற பிரச்னையோ இல்லை என்றாலும், கற்பனையான இந்த நோய் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

சின்னக் கண், மொண்ணை மூக்கு, குட்டையான முடி, வளராத புருவம் அல்லது மீசை, அகல நெத்தி, கண்ணின் கருவளையம், அதிகமான பருக்கள், அதிக அல்லது குறைந்த உயரம். இவை மட்டுமா? மாநிறம், கறுப்பு, காப்பிக்கொட்டையை வறுத்த நிறம்; இப்படி நிறைய பேர் மனநோய் வந்தவர் போலாகி சரியான சிரிப்பு, புன்னகை, உணவு, தூக்கம் இன்றி அவதிப்படுகிறார்கள். சரியான ஆடை அணிந்து கொள்வதில்லை. குறைந்த சுயமதிப்பு அதிகமாகி வாழ்வைத் தொலைப்பவராக மாறி வரும் இவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கவலை தருகிறார்கள்.

நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கத் தவிக்கிறார்கள். குடும்ப  விழாவிற்குப் செல்வதே இல்லை. போனாலும் சகஜமாகப் பழகுவதில்லை. ‘நீலாம்பரி’ போல் அறைக்குள் அடைந்து இருத்தல், கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் புதைந்து போதல், சிடுசிடுப்புடன் எப்போதும் இருத்தல், போட்டோவை முற்றிலும் தவிர்த்தல் ஆகிய மனப்பான்மை கொண்டவர்களையும் அதிகம் பார்க்கமுடிகிறது.

அகம் வேறு; புறம் வேறு. அதேநேரம், அகம் மாறும் போது, புறம் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, மனதை செம்மையாக, சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம். அழகு, நிலவு, புகழ் மூன்றுமே தேயும். கண்ணாடி உங்களது உடலைக் காட்டும்; ஆனால், அழகான நம் உள்ளம், அற்புதமான நம் அறிவு மற்றும் திறமை அல்லது ஆற்றலை காட்டாதே!

உங்களோடு பழகிப் பார்க்கும் போது, உங்கள் உள்ளத்தின் நீல, அகல, ஆழ உயரங்கள் அடுத்தவருக்குப் புரிந்து போகும் என்பது நிச்சயம். உங்களிடம் உள்ளதைப் பாருங்கள் - திறமை, ஆற்றல், குணநலன். உங்கள் உள்ளத்தைப் பாருங்கள் - மனப்பாங்கு, தன்னம்பிக்கை. உங்களிடம் இருக்கும் சிறப்பம்சங்களைப் பாருங்கள் - குடும்பம், பாசம் காட்டும் பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்கள். இல்லாததையே பார்க்காதீர்கள். இருப்பதை, இறையின் கொடையாக  உங்களுக்குக் கொடுத்துள்ளதை பாருங்கள்.

யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ‘உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லை’ என்றால் மற்றவருக்கு எப்படி உங்களைப்
பிடிக்கும்... யோசியுங்கள். உங்கள் உயரம், நிறம், எடைக்கு ஏற்ற சரியான ஆடைகளை வாங்கி அணியுங்கள். முகத்துக்கு ஏற்ற எடுப்பான அணிகலன்களை அணியுங்கள். உங்கள் பெற்றோர், நெருங்கிய நண்பர், பலருக்கு வாழ்வில், உங்கள் கண்ணாடி காட்டுவதை விட, உங்களிடம் உள்ள
சிறப்புகளை எடுத்துக் காட்ட முடியும், நம்புங்கள்!

நம்மை விரும்புவோம். ‘நாம்’ என்பது நமது நிறமோ, மூக்கோ, புருவமோ மட்டும் அல்ல... அதையும் தாண்டி! நாம் என்பது நமது திறன், ஆற்றல், ஆளுமை, நமது நம்பிக்கை! இது தான் உண்மை!

-முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us