/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கேந்திரிய வித்யாலயாக்களில் சீர்திருத்தங்கள்
/
கேந்திரிய வித்யாலயாக்களில் சீர்திருத்தங்கள்
மார் 07, 2009 12:00 AM
மார் 07, 2009 12:00 AM
மத்தியப் பள்ளிகள் என அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் தலைமையிலான குழு சமீபத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் இவர். 9வது மற்றும் 11வது வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கூடாது; 10 மற்றும் 12வது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளுக்கு முன்பாக மையத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தேசிய அளவில் செகண்டரி பள்ளிக்கு என மைய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்றும் இது கூறியுள்ளது. மந்தமான மாணவன் என்பது போன்ற மாணவர்களைக் குறிக்கும் வார்த்தைகள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் இது தெரிவித்துள்ளது.
ஒன்று முதல் 3 வகுப்புகளில் 2 ஆசிரியர் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அமைதியாக மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இக்குழு தெரிவித்துள்ளது. இந்த வகுப்புகளில் 35 நிமிட வகுப்புகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இது கூறியுள்ளது. சீனியர் வகுப்புகளில் சற்றே அதிக நேரத்தைக் கொண்ட வகுப்புகளை வைத்துக் கொள்ளவும் இது அறிவுறுத்தியுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைந்தது 50 சதவீத இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இது வலியுறுத்தியுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கஸ்துõரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களில் படிக்கும் மாணவிகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 5 முதல் 10 சீட்கள் கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இது கூறியுள்ளது. ஒரு ஆசிரியருக்கு 30 மாணவிகள் என்ற விகிதம் கட்டாயம் கேந்திரிய வித்யாலயாக்களில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் இது கூறியுள்ளது.
2005ம் ஆண்டுக்கான தேசிய பாடத்திட்ட வரையறைக்கு உதவும் வகையில் 981 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான உத்திகளை இக் குழு தருவதற்காக அமைக்கப்பட்டது. இந்த 981 பள்ளிகளில் மொத்தம் 10.18 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள். இப் பள்ளிகளில் 48 ஆயிரத்து 753 ஆசிரியர்களும் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.
மதிப்பெண் பெறுவது மட்டுமே மாணவர்களின் நோக்கமாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இது போலவே
ஆசிரியர் மாணவருக்கிடையே இணக்கமான உறவு இருக்க வேண்டிய அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது. ஞானம், புரிதல், திறன் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை மட்டுமே மாணவர்களின் சாதனைகளாகப் பார்த்த பெஞ்சமின் புளூமின் கருத்துக்களை இக்குழு மறுத்துள்ளது. என்.சி.இ. ஆர்.டி.யின் புத்தகங்கள் பரவலாக மாணவர்களை நாடெங்கும் எட்ட வேண்டியதன் அவசியத்தையும் இது கணக்கிலெடுத்துக் கொண்டுள்ளது.