sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தாகூர் தொடங்கிய விஸ்வபாரதி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (47)

/

தாகூர் தொடங்கிய விஸ்வபாரதி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (47)

தாகூர் தொடங்கிய விஸ்வபாரதி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (47)

தாகூர் தொடங்கிய விஸ்வபாரதி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (47)


மார் 07, 2009 12:00 AM

மார் 07, 2009 12:00 AM

Google News

மார் 07, 2009 12:00 AM மார் 07, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று விஸ்வபாரதி பல்கலைக்கழகம். இது மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தினிகேதனில் அமைந்துள்ளது. 1983ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தவீந்திரநாத் தாகூரால் சிறிய கல்வி ஆசிரமமாக இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் விஸ்வ வித்யாலயா என்ற பெயரில் நடத்தப்பட்டது. பின்னர் ரவீந்திரநாத் தாகூர் இதை மிகப்பெரிய கல்விநிறுவனமாக உயர்த்தினார். சுதந்திரத்துக்குப் பின் 1951 ம் ஆண்டு இந்நிறுவனம் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. பின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா, திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் போன்ற சாதனையாளர்கள் பலர் இங்குபடித்தவர்களே. இங்கு படித்த பலர் சுதந்திர போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இரண்டு நோபல் வெற்றியாளர்களுடன் தொடர்புடைய ஒரே பல்கலைக்கழகம் இந்தியாவில் விஸ்வபாரதி மட்டுமே. புள்ளியியல் வல்லுனர் மகலநோபிஸ் இங்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் பிரிவுகள்
வித்யா பவனா (ஹியுமானிட்டீஸ்)
சிக்ஷா பவனா(அறிவியல்)
பள்ளி சிக்சா பவனா (விவசாய அறிவியல்)
பினய் பவனா (கல்வி)
கலா பவனா (நுண்கலை)
ரவீந்திர பவனா (அருங்காட்சியகம்)

மேலும் நான்கு பள்ளிகள் இதன் மேற்பார்வையில் இயங்கி வருகின்றன.
பாத பவனா
சிக்ச சத்ரா (ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி)
உத்தர் சிக்ஷ சதனா(உயர்நிலைப்பள்ளி)

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்
- ஏன்ஷியன்ட் இந்தியன் ஹிஸ்டரி, கல்சர் அண்டு ஆர்க்கியாலஜி
- அரபிக், பெர்ஷியன், உருது அண்டு இஸ்லாமிக் ஸ்டடீஸ்
- வங்காளம்
- சீன மொழியும், கலாசாரமும்
- பொருளாதாரமும், அறிவியலும்
- ஆங்கிலம்
- புவியியல்
- இந்தி மற்றும் மராத்தி
- வரலாறு
- இந்தோ, திபெத்தியன் ஸ்டடீஸ்
- ஜப்பானிய மொழி
- ஒரியா
- தத்துவமும், மதமும்
- சமஸ்கிருதம், பலி மற்றும் பிரக்ரித்
- கல்வி
- உடற்கல்வி
- தாவரவியல்
- வேதியியல்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்
- சுற்றுச்சூழல் அறிவியல்
- கணிதம்
- இயற்பியல்
- புள்ளியியல்
- தாவரவியல்
- பண்டைய இசை
- இசை, நடனம் மற்றும் நாடகம்
- கலை வரலாறு
- கிராபிக்ஸ் ஆர்ட்
- டிசைன்
- ஓவியம்
- சிற்பம்

இப்பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.இ., பி.எட்., பி.எப்.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ., பி.ஹச்டி., டி.லிட்., டி.எஸ்சி., போன்ற படிப்புகள் உள்ளன.






      Dinamalar
      Follow us