/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அதிக படிப்புகள் வழங்கும் பல்கலை - சிறந்த கல்வி நிறுவனம் (48)
/
அதிக படிப்புகள் வழங்கும் பல்கலை - சிறந்த கல்வி நிறுவனம் (48)
அதிக படிப்புகள் வழங்கும் பல்கலை - சிறந்த கல்வி நிறுவனம் (48)
அதிக படிப்புகள் வழங்கும் பல்கலை - சிறந்த கல்வி நிறுவனம் (48)
மார் 14, 2009 12:00 AM
மார் 14, 2009 12:00 AM
தெற்கு டில்லி பகுதியில் அமைந்துள்ள பிரபலமான மத்திய பல்கலைக்கழகம் ஜமியா மிலியா இஸ்லாமியா. 1920ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் அலிகார் பகுதியில் இது தொடங்கப்பட்டது. பின்னர் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு இது மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்
ஹியுமானிட்டீஸ் பிரிவின் கீழ்
- அரபி
- ஆங்கிலம்
- இந்தி
- வரலாறும், கலாசாரமும்
- இஸ்லாமிக் ஸ்டடீஸ்
- உருது
- பெர்ஷியன்
சமூக அறிவியல் பிரிவின் கீழ்
- அடல்ட் கன்டினியூயிங் எஜுகேஷன் அண்டு எக்ஸ்டென்ஷன்
- பொருளாதாரம்
- பொலிட்டிக்கல் சயின்ஸ்
- உளவியல்
- சோஷியாலஜி
- சமூகப்பணி
- காமர்ஸ் அண்டு பிசினஸ் ஸ்டடீஸ்
அறிவியல் பிரிவின் கீழ்
- இயற்பியல்
- வேதியியல்
- புவியியல்
- உயிர் அறிவியல்
- கணிதம்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்
- பயோடெக்னாலஜி
கல்வி பிரிவின் கீழ்
- எஜுகேஷனல் ஸடடீஸ்
- டீச்சர் டிரைனிங் அண்டு நான் பார்மல் எஜுகேஷன்
இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி
- சிவில் இன்ஜினியரிங்
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
- எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
- அப்ளைடு சயின்ஸ் அண்டு ஹியுமானிட்டீஸ்
- கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
- ஜமியா பாலிடெக்னிக்
நுண்கலை பிரிவின் கீழ்
- ஓவியம்
- சிற்பம்
- அப்ளைடு ஆர்ட்
- ஆர்ட் எஜுகேஷன்
- கிராபிக்ஸ் ஆர்ட்
- ஆர்ட் ஹிஸ்டரி அண்டு ஆர்ட் அப்ரிஷியேஷன்
இது தவிர சட்டம், பல் மருத்துவம், கட்டடக்கலை ஆகிய துறைகள் இங்கு உள்ளன. பல்வேறு சிறப்பு மையங்களும் இங்கு செயல்படுகின்றன. பி.ஏ., பி.எஸ்., பி.காம்., பி.எட்., பி.இ., பி.டெக்., பி.பி.எஸ்., பி.ஐ.பி.எப்., எல்.எல்.பி., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எட்., எம்.எஸ்சி., எம்.ஐ.பி., எல்.எல்.எம்., எம்.பில்., பி.எச்டி., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல பிரிவுகளில் டிப்ளமோ, சர்டிபிகேட் படிப்புகளும் உள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் எந்த கல்லூரியும் இயங்காவிட்டாலும், இங்கு அதிக எண்ணிக்கையில் இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2006ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்த சவுதி அரேபிய மன்னர் நுõலகம் கட்ட ரூ. 150 கோடி வழங்கினார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் சேவக், பத்திரிகையாளர் பர்கா தத் போன்று பல பிரபலங்கள் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட புகழ் பெற்ற போட்டிகள் பல இந்த பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.