/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பொருளாதாரச் சிக்கலால் வேலையிழப்புகள் அதிகரிப்பு: உலகவங்கி கவலை
/
பொருளாதாரச் சிக்கலால் வேலையிழப்புகள் அதிகரிப்பு: உலகவங்கி கவலை
பொருளாதாரச் சிக்கலால் வேலையிழப்புகள் அதிகரிப்பு: உலகவங்கி கவலை
பொருளாதாரச் சிக்கலால் வேலையிழப்புகள் அதிகரிப்பு: உலகவங்கி கவலை
மார் 14, 2009 12:00 AM
மார் 14, 2009 12:00 AM
உலகில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதாரச் சூழல் ஏற்படுத்தும் வேலையிழப்புகள் பற்றி உலக வங்கி சமீபத்தில் தனது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச வர்த்தகமும் வரும் மாதங்களில் இன்னமும் கடுமையாக சுருங்கிவிடும் சாத்தியங்கள் இருப்பதாக இது தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் இன்னமும் பல லட்சக்கணக்கான வேலையிழப்புகள் ஏற்படும் என்றும் இது கூறியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிகபட்ச வேலையிழப்புகள் கடந்த சில மாதங்களில் தான் ஏற்பட்டுள்ளதாக இது தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் 5 சதவீதத்துக்கும் குறைவான வளர்ச்சியையே உலகப் பொருளாதாரம் கண்டுள்ள நிலையில் கடந்த 80 ஆண்டுகளில் அதிகபட்ச வேலையிழப்புகள் தற்போதுதான் நிகழ்ந்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது. கிழக்காசிய நாடுகளில் தான் தற்போது பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் இது தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உற்பத்தி வீதமும் 15 சதவீதம் குறைவாகவே எட்டப்படும் என்றும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. உலகின் 116 வளரும் நாடுகளில் 94 நாடுகளில் மந்தமான பொருளாதார வளர்ச்சியே காணப்படுகிறது. இவற்றுள் 43 நாடுகளில் கடுமையான ஏழ்மை நிலையும் வேறு சேர்ந்தே காணப்படுகிறது. இந்தச் சிக்கல்களில் நகர்ப்புறங்களைச் சார்ந்த ஏற்றுமதி, கட்டுமானம், சுரங்கம் மற்றும் உற்பத்தித் துறைகளே பெரிதும் சிக்கித் தவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பணியிழப்புகள் இதுவரை ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஜெம், நகை, ஆட்டோமொபைல் மற்றும் ஆடைத் தயாரிப்புத் துறைகளில் பெரும்பாலான பணியிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே ஏழ்மையில் இருந்த உலகின் பல நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் உதவிகளைப் புரியும் நாடுகளிலுள்ள பிரச்னைகளின் காரணமாக ஏழ்மையான நாடுகளுக்குப் பொதுவாகத் தரப்படும் நிதியுதவிகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்கள், பிற நிறுவனங்களும் இணைந்த செயல்பட்டால் மட்டுமே பிரச்னைகள் தீர வழி பிறக்கும் என்றும் வேலையிழப்பைத் தடுத்தல் மற்றும் பணிப் பாதுகாப்பு போன்ற அம்சங்களை அப்போதுதான் எட்ட முடியும் என்றும் உலக வங்கி தெரிவிக்கிறது. குறிப்பாக தற்போதைய சிக்கல்களிலிருந்து வளரும் நாடுகளைக் காப்பது அத்தியாவசியத் தேவையென்றும் உலகச் சிக்கலுக்கு உலகம் தழுவிய தீர்வைக் காண்பது இன்றியமையாதது என்றும் உலக வங்கி கூறுகிறது.