sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மணிப்பூர் பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (54)

/

மணிப்பூர் பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (54)

மணிப்பூர் பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (54)

மணிப்பூர் பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (54)


ஏப் 25, 2009 12:00 AM

ஏப் 25, 2009 12:00 AM

Google News

ஏப் 25, 2009 12:00 AM ஏப் 25, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிப்பூர் பல்கலைக்கழகம் 1980ம் ஆண்டு இம்பாலில் நிறுவப்பட்டது. இது 287 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2005ல் மத்திய பல்கலைக்கழகமாக உயர்ந்தது. மணிப்பூர் பகுதியை ஆட்சி செய்த அரசர் காம்பிர் சிங் இம்பால் அருகே காஞ்சிப்பூரில் தனது அரண்மனையை நிறுவினார். அதன் அருகே இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

மணிப்பூர் தொழில்நுட்ப நிறுவனமும், 72 கல்லூரிகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மல்டி மீடியா ரிசர்ச் சென்டர் 1989ம் ஆண்டு யு.ஜி.சி.,யின் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் நிறுவப் பட்டது.  நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பதினேழு மீடியா சென்டர்களில் இதுவும் ஒன்று. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்த ஒரு மீடியா சென்டர் மட்டுமே உள்ளது. இது தவிர

- மணிப்புரி ஸ்டடீஸ்
- மியான்மர் ஸ்டடீஸ்
- டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றுக்கான தனி மையங்கள் செயல்படுகின்றன.

இங்குள்ள நூலகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உயர்கல்வியை மேம்படுத்துவதில் இந்த பல்கலைக்கழகம் பெரும்பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ‘கேட்வே ஆப் இந்தியா’ என இது அழைக்கப்படுகிறது. அறிவியல், சமூகஅறிவியல், ஹியுமானிட்டீஸ், மெடிக்கல் சயின்ஸ் போன்ற பல துறைகளில் இதில் இதுவரை 15 ஆயிரம் முதுநிலைப்பட்டதாரிகள், 700 பி.எச்டி., முடித்தவர்கள் உருவாகியுள்ளனர்.

இதில் உள்ள துறைகள்:
- ஆந்த்ரபாலஜி
- பயோ கெமிஸ்ட்ரி
- வேதியியல்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்
- எர்த் சயின்ஸ்
- புவியியல்
- லைப் சயின்ஸ்
- கணிதம்
- இயற்பியல்
- புள்ளியியல்
- ஆங்கிலம்
- இந்தி
- மொழியியல்
- மணிப்புரி
- தத்துவம்
- மணிப்புரி நடனம்
- வயது வந்தோர் கல்வி
- வணிகம்
- பொருளாதாரம்
- வரலாறு
- லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்
- எம்.ஐ.எம்.எஸ்.,
- ஜர்னலிஷம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன்

இங்கு ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. ஆண்களுக்கான ஹாஸ்டலில் 566 மாணவர்கள் தங்கிப் படிக்க முடியும். பெண்களுக்கு விடுதி 1982ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 675 மாணவிகள் வரை தங்கும் வசதி உள்ளது.

மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு அருகே வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில் இங்கு சுகாதார மையம் செயல்படுகிறது. இதில் ஒரு மருத்துவர், மருத்துவ உதவியாளர், பல் மருத்துவர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.டி.எம்., வசதியுடன் கூடிய வங்கிக்கிளை, தபால் அலுவலகம் ஆகியவை இந்த பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளன.






      Dinamalar
      Follow us