/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
காலத்திற்கேற்ற கல்வி இ.எம்.பி.ஏ.,
/
காலத்திற்கேற்ற கல்வி இ.எம்.பி.ஏ.,
ஏப் 25, 2009 12:00 AM
ஏப் 25, 2009 12:00 AM
நிர்வாகவியல் தொடர்புடைய படிப்புகளைப் படிப்பது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி நிர்வாகவியல் படிப்புப் பள்ளிகளாகக் கருதப்படுபவை ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள்தான். வெகு சில இடங்களில் மட்டுமே இவை இருப்பதாலும் புகழ் பெற்ற பிற எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் எல்லாமே மிகச் சில இடங்களில் மட்டுமே இருப்பதாலும் இலேர்னிங் முறையில் எம்.பி.ஏவைப் படிப்பது இன்று வரவேற்கத்தக்கதாக மாறி வருகிறது. நிர்வாகவியல் படிப்பை அஞ்சல் வழியில் படிப்பது இன்னமும் கூட பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளும் தொடர்ந்து நிர்வாகவியல் படிப்புகளில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் எக்சிகியூடிவ் எம்.பி.ஏ. படிப்பைப் பயில உதவும் வகையில் செயற்கைக்கோள் உதவியுடன் ஐ.ஓ.எல்.முறையில் (ஐணtஞுணூச்ஞிtடிதிஞு Oணண்டிtஞு ஃஞுச்ணூணடிணஞ்) படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. எச்.என்.ஜி.இ. எனப்படும் ஹியூஸ் நெட்குளோபல் எஜூகேசன் அமைப்புடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் பலவும் இ.எம்.பி.ஏ. படிப்புகளைத் தரத் தொடங்கியுள்ளன.
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஐ.எப்.டி., ஐ.ஐ.எம்., போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களும் எச்.என்.ஜி.,யுடன் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தரமான கல்வியை பணிபுரிவோரும் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் எதிர்கால சந்ததியினரின் கல்வி முறையையே மாற்றியமைக்கும் தன்மை கொண்ட இப்படிப்புகள் நமது பண்டைய கல்வி முறையின் சிறப்புகளையும் நவீன தொழில் நுட்ப அம்சங்களையும் இணைத்துத்தருவதாக இருக்கின்றன. செயற்கைக்கோள் உதவியுடன் வீடியோ, ஆடியோ மற்றும் டேட்டா வாயிலாக இந்த வகை படிப்புகள் இன்டராக்டிவ் படிப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு இந்தியாவில் தற்போது 34 நகரங்களில் 50 வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதன்மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்கல்வியை வயது வித்தியாசமின்றி படிக்க இது உதவும். இந்த முறையில் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரம் பேர் இ.எம்.பி.ஏ. பட்டத்தைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் இதற்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்திய கல்வி நிறுவனங்களில் புகழ்பெற்ற ஆசிரியர்கள் குர்கானில் உள்ள ஸ்டுடியோவிற்கு வந்து வகுப்பறைகளில் நடத்துவதைப் போல நடத்துகிறார்கள். இது இந்தியாவின் பல நகரங்களில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒளிபரப்பப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங்கை ஒத்த இந்த வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறலாம். மாணவர்களின் வருகையையும் இதன் மூலமாக உறுதி செய்து கொள்ளலாம்.
நடத்தப்படும் வகுப்புகள் எல்லாம் இன்டர்நெட் தளத்திலும் போடப்படுவதால் தவற விடும் வகுப்புகளை நெட்டில் பார்த்துக் கொள்ளலாம். எனினும் 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேருபவர்களுக்கு புத்தகங்களும் அனுப்பப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் இந்தப் படிப்பில் தங்களது அதிகாரிகள் சேர ஸ்பான்ஸர் செய்வதும் அதிகரித்து வருகிறது.
கேனான், கில்லட், ஐ.பி.எம்., சிட்டி பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பாங்க், டாடா மோட்டார்ஸ், நோக் கியா, விப்ரோ, சாம்ஸங், ஐ.என்.ஜி. வைஸ்யா போன்ற நிறுவனங்கள் இதுபோல ஸ்பான்ஸர் செய்கின்றன. பிசினஸ் மேனேஜ்மெண்ட், எக்சிகியூடிவ் புரொகிராம் பார் எங் புரபசனல்ஸ், எக்சிகியூடிவ் புரொகிராம் இன் இன்டர்நேசனல் பிசினஸ் போன்ற படிப்புகள் இப்போது தரப்படுகின்றன. முழு விபரங்களை தீதீதீ.டணஞ்ஞு.டிண தளத்தில் பெறலாம். காலத்திற்கேற்ற கல்வியாக கனிந்திருக்கிறது இந்த இ.எம்.பி.ஏ. படிப்புகள்.