/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தென்கிழக்காசியாவின் பழமையான ஐ.வி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (67)
/
தென்கிழக்காசியாவின் பழமையான ஐ.வி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (67)
தென்கிழக்காசியாவின் பழமையான ஐ.வி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (67)
தென்கிழக்காசியாவின் பழமையான ஐ.வி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (67)
ஜூலை 11, 2009 12:00 AM
ஜூலை 11, 2009 12:00 AM
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ.,) உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இசாட்நகரில் அமைந்துள்ளது. இதன் வளாகம் முத்கேஸ்வர், பெங்களூரு, பாலம்பூர், போபால், கோல்கட்டா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ‘இம்பீரியல் பேக்டீரியாலஜிக்கல் லேபாரட்டரி’ என்ற பெயரில் முதன் முதலில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. 1925 ம் ஆண்டு கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு 350 ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர். தென்கிழக்காசியாவிலேயே பழமையான நிறுவனம் இது. ‘கால்நடை அறிவியலின் மெக்கா’ என இந்நிறுவனம் போற்றப்படுகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் நிறுவனங்களும் ஐ.வி.ஆர்.ஐ.,யின் உதவியுடன் தான் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வழங்கப்படும் படிப்புகள்
- எம்.வி.எஸ்சி.,
- பி.எச்டி.,
- நேஷனல் டிப்ளமோ
இதில் முதுநிலை மற்றும் பி.எச்டி., படிப்பாக
- விலங்கு மரபியல் மற்றும் இனப்பெருக்கம்
- விலங்கு ஊட்டச்சத்து
- கால்நடை பெருக்க கல்வி
- விலங்கு உயிர்வேதியியல்
- கால்நடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம்
- பவுல்ட்ரி அறிவியல்
- கால்நடை பேக்டீரியாலஜி
- கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை
- கைனகாலஜி அண்டு ஆப்ஸ்டெட்ரிக்ஸ்
- கால்நடை நோய்தடுப்பியல்
- கால்நடை மருத்துவம்
- கால்நடை நுண்ணுயிரியல்
- கால்நடை நோய் அறிவியல்
- கால்நடை மருந்தியல்
- கால்நடை உடற்கூறியியல்
- கால்நடை பொது சுகாதாரம்
- கால்நடை அறுவை சிகிச்சை
- கால்நடை வைராலஜி
- விலங்கு உயிரி தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்படுகின்றன
முதுநிலைப்படிப்பாக மட்டும்
- உயிரி புள்ளியியல்
- நோய் அறிவியல்
- கால்நடை பொருளாதாரம் ஆகியவை உள்ளன.
டிப்ளமோ படிப்பாக வழங்கப்படும் படிப்புகள்
- கால்நடை நோய்தடுப்பு மருத்துவம்
- விலங்கு நிர்வாகம்
- கால்நடை உயிரி உற்பத்தி
- விலங்கு இனப்பெருக்கம்
- இறைச்சி பொருட்கள் தொழில்நுட்பம்
- தீவன தொழில்நுட்பம்
- பவுல்ட்ரி ஹஸ்பண்டரி
- குதிரை வளர்ப்பு, மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை
- கண்காட்சி மற்றும் காட்டு விலங்குகள் சுகாதாரம் மற்றும் மேலாண்மை
மாணவிகளுக்கான ஹாஸ்டல் உட்பட மொத்தம் ஆறு ஹாஸ்டல்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் ஹாஸ்டல்களில் தங்க வேண்டியது கட்டாயம். இங்குள்ள நூலகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.