தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சி.எப்.டி.ஐ.,- சிறந்த கல்வி நிறுவனங்கள் (74)

சி.எப்.டி.ஐ.,- சிறந்த கல்வி நிறுவனங்கள் (74)

சி.எப்.டி.ஐ.,- சிறந்த கல்வி நிறுவனங்கள் (74)


ஆக 29, 2009 12:00 AM

ஆக 29, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 29, 2009 12:00 AM ஆக 29, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலணி தொழில்நுட்பம் குறித்து கற்றுத்தரும் இந்தியாவின் முன்னணி நிறுவனம் சென்னையில் அமைந்துள்ள, ‘சென்ட்ரல் புட்வேர் டிரைனிங் இன்ஸ்டிடியூட்’.   மத்திய சிறுதொழில் அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக இது இயங்கி வருகிறது. 1957ல் தொடங்கப்பட்ட சி.எப்.டி.ஐ., தோல் பொருட்கள், காலணி தொழில்நுட்பம் தொடர்பாக நீண்டகால, குறுகிய கால, பகுதிநேர, மாலை நேர படிப்புகளை வழங்கி வருகிறது. காலணி தொழில்நுட்பம் தொடர்பாக மற்றொரு கல்வி நிறுவனத்தை, மத்திய அரசு, இதே பெயரில் 1963ம் ஆண்டு ஆக்ராவில் தொடங்கியது. இது 1996ம் ஆண்டு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.   சென்னை சி.எப்.டி.ஐ.,யில் உள்ள படிப்புகள்
- டிப்ளமோ இன் புட்வேர் டிசைன் அண்டு புரடக்ஷன்
- போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் புட்வேர் டெக்னாலஜி
- போஸ்ட் டிப்ளமோ இன் புட்வேர் டெக்னாலஜி
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் புட்வேர் டெக்னாலஜி   ஆக்ரா சி.எப்.டி.ஐ.,யில் உள்ள படிப்புகள்
- டிப்ளமோ இன் புட்வேர் டிசைன் அண்டு   புரடக்சன்
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் புட்வேர் டிசைனிங் அண்டு புராடக்ட் டெவலப்மென்ட்
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஷு டிசைனிங் அண்டு ஸ்கெட்சிங்
- பேசிக் டிசைன் அண்டு பேடர்ன் இன்ஜினியரிங்
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் கம்ப்யூட்டர் எய்டட்   ஷு டிசைனிங்
- அட்வான்ஸ்டு சர்டிபிகேட் கோர்ஸ் இன் கம்ப்யூட்டர் எய்டட் ஷு டிசைனிங்
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் கம்ப்யூட்டர் எய்டட் 3டி மாடலிங்
- சர்டிபிகேட் கோர்ஸ் இன் கம்ப்யூட்டர் எய்டட் 3டி மாடலிங் அண்டு   சி.என்.சி., ஆப்பரேஷன்ஸ்
- கிராஷ் கோர்ஸ் இன் புட்வேர் டிசைன் அண்டு புரடக்ஷன் டெக்னாலஜி
- ஆப்பரேட்டர்ஸ் கோர்ஸ் இன் கிளிக்கிங் அண்டு மெட்டீரியல் டெக்னாலஜி
- ஆப்பரேட்டர்ஸ் கோர்ஸ் இன் லிஸ்டிங் அண்டு பாட்டம் மேக்கிங்
- சூப்பர்வைசர்ஸ் கோர்ஸ் இன் அப்பர்குளோசிங் டெக்னாலஜி சென்னையில் இருக்கும் சி.எப்.டி.ஐ., மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று காலணி, தோல்பொருட்கள், ஷு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறது.   இதற்கு தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டு மையம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த மையத்தின் டிப்ளமோ இன் புட்வேர் டிசைன் அண்டு புரடக்ஷன் படிப்பு பிரிட்டனின் ‘லெஸ்டர் காலேஜ் ஆப் புட்வேர் டெக்னாலஜி’யின் அங்கீகாரம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us