ஆக 05, 2026 11:17 AM
ஆக 05, 2026 11:17 AM

விளையாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியியல் என்பது கலை, கற்பனை, தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் இணைக்கும் தனித்துவமான பொறியியல் துறையாகும்.
டிஜிட்டல் உலகம் விரைவாக வளர்கின்ற இக்காலத்தில், கேமிங் துறை தனித்து நிற்கும் தொழில்நுட்பப் பொறியியல் துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. இது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பல துறைகளில் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
படிப்புகள்
இளநிலை படிப்புகளாக பி.டெக்., / பி.இ., போன்ற பாடநெறிகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. கிராபிக்ஸ் வடிவமைப்பு, கேமிங் மென்பொருள் உருவாக்கம், கதையமைப்பியல், 3டி அனிமேஷன், ஏ.ஆர்., / வி.ஆர்., யு.ஐ., / யு.எக்ஸ்., வடிவமைப்பு மற்றும் கேம் எஞ்சின் பயன்பாடுகள் போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
மேம்பட்ட அறிவைப் பெற விரும்புபவர்கள் எம்.இ., / எம்.டெ., போன்ற முதுநிலை படிப்புகளையும் தொடரலாம். இதில் மேம்பட்ட விளையாட்டு தர்க்கம், ஏஐ அடிப்படையிலான கேமிங், நிகழ்நேர ரெண்டரிங், மோஷன் கேப்சர் போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள்
விளையாட்டு வடிவமைப்பாளர், விளையாட்டு உருவாக்குநர், நிலை வடிவமைப்பாளர், விளையாட்டு கலைஞர், தொழில்நுட்ப அனிமேட்டர், யு.ஐ.,/யு.எக்ஸ்., வடிவமைப்பாளர், விளையாட்டு சோதனையாளர், உருவகப்படுத்துதல் உருவாக்குநர், வி.ஆர்.,/ஏ.ஆர்., டெவலப்பர் போன்ற பணி வாய்ப்புகள் பல உள்ளன.
