காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 10:49 AM

புதுச்சேரி:
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பல்கலைக் கழக மானியக்குழுவின் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தனர்.
லாஸ்பேட்டையில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் முனைவர் கருணேஷ் சேன்சேனா தலைமையிலான அப்துல் வகிட் ஹஸ்மெனி, அல்காபீஸ் அடங்கிய தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழுவினர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.
அதில், கடந்த 5 ஆண்டுகளாக கல்லுாரியில் நடந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆய்வின்போது, பட்ட மேற்படிப்பு மைய இயக்குனர் செல்வராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கல்லுாரியின் பல்வேறு துறைகளுக்கும், தர மதிப்பீட்டு குழுவினர் சென்று, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை கேட்டறிந்தனர். மேலும், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தை சேர்ந்த நிர்வாகிளுடன் கலந்துரையாடினர்.
இதையடுத்து, கல்லுாரியின் தரமதிப்பீட்டு அறிக்கையினை யுஜிசி.,க்கு சமர்ப்பித்தனர்.