sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் நுாலகத்திற்கு தம்பதி சமேதராக வருகை, புத்தகங்கள் அருமை என்று கூறி மெய்சிலிர்ப்பு

/

தினமலர் நுாலகத்திற்கு தம்பதி சமேதராக வருகை, புத்தகங்கள் அருமை என்று கூறி மெய்சிலிர்ப்பு

தினமலர் நுாலகத்திற்கு தம்பதி சமேதராக வருகை, புத்தகங்கள் அருமை என்று கூறி மெய்சிலிர்ப்பு

தினமலர் நுாலகத்திற்கு தம்பதி சமேதராக வருகை, புத்தகங்கள் அருமை என்று கூறி மெய்சிலிர்ப்பு


UPDATED : பிப் 11, 2026 02:24 PM

ADDED : பிப் 11, 2026 02:27 PM

Google News

UPDATED : பிப் 11, 2026 02:24 PM ADDED : பிப் 11, 2026 02:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
'தினமலர்' நாளிதழ் நுாலகத்திற்கு தம்பதி சமேதராக, மூன்று ஜோடிகள் நேற்று வந்தனர். 'ஆஹா... புத்தகங்கள் அனைத்தும் அருமையாக உள்ளதே' என்று கூறி மெய்சிலிர்த்தனர்.

பெங்களூரு, தினமலர் அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில் திறக்கப்பட்டு உள்ள நுாலகத்தை, தமிழ் ஆர்வலர்கள் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர். தமிழர்களின் வாசிப்பு தாகத்தை போக்கும் இடம் என்றும் வர்ணிக்கின்றனர்.

இத்தனை நாட்களாக இது போன்ற இடத்தை தான் தேடி அலைந்தோம் என்று கூறுவோர் முகத்தில் பிரகாசத்தை பார்க்க முடிகிறது. தற்போது தம்பதி சமேதராகவும் வருகை தர ஆரம்பித்து உள்ளனர்.

ஸ்ரீராமன் - லட்சுமி


தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவரும், பெங்களூரு ஜக்கூர் அருகேயுள்ள சொக்கனஹள்ளியில் வசிப்பவருமான ஸ்ரீராமன், 74, தன் மனைவி லட்சுமி, 61, உடன், தினமலர் நுாலகத்திற்கு நேற்று வருகை தந்தார்.

சேலம் காலைக்கதிர் அலுவலகத்தின் முதல் ஏஜென்டான இவர், தற்போது ஆன்மிக புத்தகம் எழுகிறார். 'கோபாலன் பார்வதி பப்ளிகேஷன்' என்ற பெயரில் பதிப்பகம் வைத்து உள்ளார். தினமலர் நுாலகத்தில் வைக்கப்பட்டு உள்ள கடல் தாமரை புத்தகத்தை ஆர்வமாக படித்தார். சித்தர்கள் தொடர்பான புத்தகங்களையும் எடுத்து புரட்டினார்.

இவர் எழுதிய முப்பெரும் ஆன்மிக வரலாறு பகுதி - 1 முதல் 3 புத்தகங்கள், தினசரி ஓம் நமசிவாய எழுதும் புத்தகம், சிவபுராணம், பஞ்சபுராணம், அறிந்த அவர்களும் அறியாத அவர்களின் மறுபக்கமும் போன்ற புத்தகங்களை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

ஸ்ரீராமனின் மனைவி லட்சுமி, கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர். தமிழில் நன்கு படிக்க தெரிந்த அவரும், பல புத்தகங்களை ஆர்வமாக பார்த்தார். குறிப்பாக கேரள கோவில்கள் பற்றிய புத்தகங்களை படித்து, அதில் குறிப்பிட்டு இருந்த தகவலை அறிந்து வியந்தார்.

வி.கே.கண்ணன் குருஜி - சசிரேகா


இவர்களை தொடர்ந்து, பெங்களூரு ஹலசூரு காயத்ரி பரிவார் அமைப்பின் வி.கே.கண்ணன் குருஜி, தன் மனைவி சசிரேகாவுடன் வருகை தந்தார். எளிய கீதை, திருக்குறள் குறளும் - பொருளும், ஸ்ரீ கார்த்தீக புராணம், குறள் வழி நின்றவர்கள் பகுதி 1, 2, சுவாமி விவேகானந்தர் போன்ற புத்தகங்களை, நுாலகத்திற்கு இன்முகத்துடன் வழங்கினர். நுாலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை கண்ணிமைக்காமல் பார்த்தனர்.

பின், வி.கே.கண்ணன் கூறுகையில், “இதுவரை நாளிதழ்கள் கண்டிராத புதிய முயற்சி தான் இந்த நுாலகம். இன்றைய இளம்தலைமுறைக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்களை இங்கு வரவேற்கும் வகையில், நிறைய புத்தகங்கள் உள்ளன.

தமிழ் புத்தகம் மட்டுமின்றி கன்னட, ஆங்கில புத்தகங்களும் இருப்பது கூடுதல் அனுகூலம். எனது தந்தை, மதுரையில் சிறிய நுாலகம் நடத்தினார். சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு உள்ளது. எனது மனைவியும் புத்தக பிரியர் தான். ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை விரும்பி படிப்பார்,” என்றார்.

வேணுகோபால் - ஜெயந்தி


பெங்களூரு சுப்பையனபாளையாவில் வசிக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் முரட்டு ரசிகரான வேணுகோபால், மனைவி ஜெயந்தியுடன், நுாலகத்திற்கு வருகை தந்தார். கடந்த 1955ம் ஆண்டு தமிழில் வெளியான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடக புத்தகம், 1965ல் வெளியான திருப்புகழ் விரிவுரை திருப்பரங்குன்றம் (முதற்படை வீடு) புத்தகங்களை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்தார். நுாலகத்தில் இருந்த சிவாஜி தொடர்பான புத்தகங்களை ஆர்வமாக படித்தார்.

பின், வேணுகோபால் கூறுகையில், “நுாலகத்திற்கு ஏற்கனவே நுாற்றுக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்து உள்ளேன். இன்னும் நிறைய கொடுப்பேன். கர்நாடக தமிழர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், தினமலர் அலுவலகத்தில் கடல் தாமரை புத்தக பூங்கா பூத்ததை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர்கள் அனைவரும் இங்கு வந்து, அறிவு பொக்கிஷ கடலில் நீந்தி முத்து எடுக்க வேண்டும். போதுமான அளவு புத்தகங்கள் இங்கு உள்ளது. இது வரை பார்க்காத நிறைய பொக்கிஷம், குவிந்து இருப்பது சந்தோஷம். மாணவர்கள் அறிவு பொக்கிஷத்தை வளர்க்கும் இடமாக இந்த இடம் மாறும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்றார்.






      Dinamalar
      Follow us