கடல் தாமரை புத்தக பூங்கா அதீத வெற்றி அடைய இறைவனை தினமும் பிரார்த்திப்பேன்

UPDATED : மார் 16, 2026 04:42 PM
ADDED : மார் 16, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் அதீத வெற்றி அடைய, இறைவனை தினமும் பிரார்த்திப்பேன் என்று, நுாலகத்திற்கு வந்த 89 வயது முதியவர் ராஜாமணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தில் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் உள்ளது. நுாலகத்திற்கு, பெங்களூரு ஒயிட்பீல்டில் இருந்து 89 வயது முதியவர் ராஜாமணி, தனது மகன் ஸ்ரீராம், பேரன் தத்வஜன் ஆகியோருடன் நேற்று வந்தார். அந்துமணி பதில்கள், அந்துமணியி ன் பா.கே.ப., ஆகிய புத்தகங்களையும், சோழர்களின் வரலாறு புத்தகத்தையும் ராஜாமணியும், அவரது மகனும் ஆர்வமாக படித்தனர். ஆங்கில புத்தகங்களை தத்வஜன் வாசித்தார்.
பின், ராஜாமணி கூறியதாவது:
எனது பூர்வீகம் சேலம் மாவட்டம், மேட்டூர். ஆனால் படித்தது, வேலை செய்தது எல்லாம் ஈரோடு. தமிழக அரசின் மின்சார துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். ஈரோட்டில் தினமலர் அலுவலகத்தை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்த போது, அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். அது இன்னும் பசுமை மாறாத நினைவாக உள்ளது.
தினமலர் நாளிதழில் வரும் பட்டம், சிந்தனை களம் பகுதிகளை விரும்பி படிக்கிறேன். குறுக்கெழுத்து புதிர்கள் மீதான ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. இப்போது நானே சொந்தமாக குறுக்கெழுத்து புதிர் போடுகிறேன். இதற்கு தினமலர் தான் காரணம்.
இங்கு வந்ததும் திருக்குறள், சோழர்கள் வரலாறு, அந்துமணி பதில்கள், அந்துமணியின் பா.கே.ப., புத்தகங்களை படித்தது திருப்தியாக உள்ளது. தமிழை வளர்க்க இந்த நுாலகத்தை ஆரம்பித்து உள்ளீர்கள். உங்கள் எண்ணமும், முயற்சியும் வெற்றி பெற வேண்டும். கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் அதீத வெற்றி அடைய, இறைவனை தினமும் பிரார்த்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் பேசுவது போன்று, ராஜாமணி தன் கைப்பட பேப்பரில் எழுதிய கவிதையை வழங்கினார். அது வருமாறு:
புத்தகம் பேசுகிறது...
புத்தகம் பேசுகிறது...
பிள்ளை பேறு போல் என் பிறப்பு
சிறுகதையில் சிரித்தேன்
நாவல்களில் தவழ்ந்தேன்
வரலாற்றில் வாழ்ந்தேன்
கவிதையில் மழலை பேசினேன்
அச்சிட்ட பக்கங்கள் என் அங்கங்கள்
பளிச்சிடும் படங்கள் உயிரோவியங்கள்
முன்பின் அட்டைகள்
என் மேனியின் சட்டைகள்
மென்மையாக புரட்டுங்கள்
பொன்போல் பேணுங்கள்
ஆழ்ந்து படியுங்கள்
அறிவை பெறுங்கள்
என்னை அன்போடு வாழ்த்துங்கள்
நான் ஆல் போல வளர்வேன்!