தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அளவுக்கு அதிகமான மாணவர்கள் பயணம் செய்யும் ஆட்டோக்கள்: விபத்து அபாயம்

அளவுக்கு அதிகமான மாணவர்கள் பயணம் செய்யும் ஆட்டோக்கள்: விபத்து அபாயம்

அளவுக்கு அதிகமான மாணவர்கள் பயணம் செய்யும் ஆட்டோக்கள்: விபத்து அபாயம்


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றி செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பலர், ஆட்டோக்கள், வேன், பஸ் ஆகியவற்றின் மூலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அதிகப்படியான மாணவ, மாணவிகளை ஏற்றி சென்ற, வேன், ஆட்டோ, பஸ் ஆகியவை விபத்துக்குள்ளானதில், பல மாணவர்கள் உயிரிழந்தனர்.

எனவே, ஆட்டோ, பேருந்து, வேன்களில் மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றி செல்வதில், ஓட்டுனர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில், சிறிய மாணவர்கள் என்றால், எட்டு பேரும், பெரிய மாணவர்கள் என்றால் ஆறு பேரையும், பெரிய பயணிகள் எனில், மூவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான பயணிகளையும், மாணவர்களையும் ஏற்றி சென்ற ஆட்டோ, வேன், பஸ்களை பிடித்து, வாகன உரிமையாளர்களுக்கு, ஆர்.டி.ஓ.,க்கள் அபராதம் விதித்தால், விபத்துக்கள் குறைந்தது.
இந்நிலையில், ஈரோட்டில் மீண்டும் அதிக பயணிகளையும், மாணவர்களையும் ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளி வாகனங்கள், பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஆட்டோவில் குழந்தைகளை அனுப்புகிறோம். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டால், ஒரு குழந்தைக்கு, 800 முதல், 900 ரூபாய் வரை கேட்பதால், பிரச்னையில்லாமல் குழந்தைகள் சென்றால் சரி எனக்கூறி, 350 முதல் 400 ரூபாய்க்கு அனுப்புகிறோம்.

ஈரோட்டில், அளவுக்கு அதிகமாக மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றி செல்லும், ஆட்டோக்கள், வேன், பஸ் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு, ஆர்.டி.ஓ.,க்கள் அபராதம் விதித்து வந்தனர். சில மாதமாக, பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்களை, ஆர்.டி.ஓ.,க்களும், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

எனவே, ஒரு ஆட்டோவில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களையும், பயணிகளையும் அடைத்து செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகள் மற்றும் மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும், ஆர்.டி.ஓ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us