தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலைப் பல்கலையில் உதவி சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு

அண்ணாமலைப் பல்கலையில் உதவி சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு

அண்ணாமலைப் பல்கலையில் உதவி சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசு நியமித்த டி.ஆர்.ஓ., உதவி சிறப்பு அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட குளறுபடிகளால் கடந்த 4ம் தேதி நிர்வாக சிறப்பு அதிகாரியாக ஆணையர் ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.

அதைத் தொடர்ந்து அரசு மேலும் இரண்டு டி.ஆர்.ஓ., பதவி கொண்ட உதவி சிறப்பு அதிகாரிகளை நியமித்தது.

இதில், தஞ்சாவூர் குருங்குளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உதவி சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். மற்றொரு டி.ஆர்.ஓ.,வான கரூரைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் நேற்று, நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us