அரசு மாதிரிப் பள்ளி அமைக்கும் திட்டம் கிடப்பில் அரசு நிதி வீணாகிறது
அரசு மாதிரிப் பள்ளி அமைக்கும் திட்டம் கிடப்பில் அரசு நிதி வீணாகிறது
UPDATED : நவ 02, 2023 12:00 AM
ADDED : நவ 02, 2023 09:53 AM
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021ல் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மாதிரிப் பள்ளி அமைக்க ரூ.56 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள், நவீன கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்குரிய 7 ஏக்கர் இடத்தை வருவாய்த்துறை மூலம் தேடும் பணி நடக்கிறது.தற்போது ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் அரசு மாதிரிப் பள்ளி துவங்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வரை 300 மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் அரசு நீதி வீணாடிக்கப்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையினர் இணைந்த விரைவில் 7 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அரசு மாதிரிப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு மாதிரிப் பள்ளிக்குரிய 7 ஏக்கர் இடம் சில இடங்களை வருவாய்த்துறை மூலம் பார்வையிடப்பட்டுள்ளது. விரைவில்இடம் தேர்வு செய்து வரும் கல்வி ஆண்டில் பணிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
