தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி முறையின் சாதக, பாதகங்கள் என்ன? விவாதிக்க அழைக்கிறது தினமலர்

கல்வி முறையின் சாதக, பாதகங்கள் என்ன? விவாதிக்க அழைக்கிறது தினமலர்

கல்வி முறையின் சாதக, பாதகங்கள் என்ன? விவாதிக்க அழைக்கிறது தினமலர்


UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM

ADDED : ஜூலை 27, 2013 08:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM ADDED : ஜூலை 27, 2013 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். குழந்தைகள் எந்த கல்வி முறையை விரும்புகின்றனர், பெற்றோர் தங்கள் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கின்றனரா அல்லது குழந்தைகள் விருப்பத்துக்கு ஏற்ப கல்வி கற்க அனுமதிக்கின்றனரா, ஆசிரியர்கள் எப்படிப்பட்ட மாணவரை எதிர்பார்க்கின்றனர், தற்போதைய கல்வி முறை, மாணவர்களுக்கு எதை போதிக்கிறது, ஆகியவை அலசப்படுகின்றன.

மொபைல் போன், சமூக வலை தளங்கள் மாணவர்களை திசை திரும்புகின்றனவா, உள்ளிட்டவை குறித்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் என, மூன்று தரப்பிலும் விவாதிக்க உள்ளனர். இதற்காக நடத்தப்படும் போட்டியில், வெற்றி பெறும் சிறந்த மாணவர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோருக்கு, "சங்கமம்" விருது வழங்கப்படுகிறது.

சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள, சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நிகழ்ச்சி நடக்கிறது; அனுமதி இலவசம். காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ள நிகழ்ச்சியில், கலந்து கொள்ள விரும்புவோர், 044 - 2855 5784, 97106 36780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us