தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவுநீரால் மாணவிகளுக்கு தொற்று நோய் அபாயம்

பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவுநீரால் மாணவிகளுக்கு தொற்று நோய் அபாயம்

பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவுநீரால் மாணவிகளுக்கு தொற்று நோய் அபாயம்


UPDATED : டிச 03, 2014 12:00 AM

ADDED : டிச 03, 2014 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2014 12:00 AM ADDED : டிச 03, 2014 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவுநீரால், மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி அரைகுறையாக விடப்பட்டதால், கால்வாயில் கழிவுநீர் செல்லாமல், பள்ளி அருகே தேங்கி நிற்கிறது.

இதனால், பள்ளிக்கு வரும் மாணவியர், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை, சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக, மாணவியரின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் பள்ளி அருகே சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் கால்வாய் பணியை துரிதப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us