தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை பட்டியலில் இடம்பெற நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் முயற்சி

சாதனை பட்டியலில் இடம்பெற நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் முயற்சி

சாதனை பட்டியலில் இடம்பெற நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் முயற்சி


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: கைகளால் புதிய டிசைன்களை உருவாக்கும் சாதனை நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக, இந்திய வரைபடத்தை, டிசைனாக, நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுயமாக டிசைன்களை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை, ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 24 மணி நேரத்தில் புதிய டிசைன் உருவாக்கும் சாதனையை நிகழ்த்த, நிப்ட்-டீ மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். லிம்கா, கின்னஸ் போன்ற சாதனை பதிவாளர்களை அழைத்து, இந்நிகழ்ச்சியை சாதனை பட்டியலில் இடம்பெற செய்யவும், முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான வெள்ளோட்டமாக, புதிய டிசைன்களை உருவாக்கும் பணிகளை, கடந்த 7ம் தேதி மதியம் 12:00 மணிக்கு துவங்கினர். நாட்டில் உள்ள மாநிலங்களின் கலை, பண்பாடுகளை கருத்தாக கொண்டு, கல்லூரியின் ஆயத்த ஆடை வடிவமைப்பு துறை 2ம் ஆண்டு மாணவர்கள், 30 பேர் களம் இறங்கினர்.

கல்லூரி வளாகத்தில், 40 அடி உயரத்தில் இந்திய வரைபடத்தை வரைந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு மிக்க ஓவியங்கள் மற்றும் கலைகளை மையமாக கொண்டு, கைகளாலே புதிய டிசைன்களுக்கான, ஸ்டோரி போர்டு உருவாக்கினர். அதிலிருந்து வண்ணங்கள், டிசைன்களை பிரித்தெடுத்து, கலர் போர்டு வரைந்தனர். ஸ்டோரி போர்டு, கலர் போர்டுகளை அடிப்படையாக கொண்டு, மொத்தம் 13 புதிய டிசைன்களை உருவாக்கினர்.

கல்லூரி ஆய்வகத்தில் துணி உற்பத்தி செய்து, சாயமேற்றி, கட்டிங், ஸ்டிச்சிங் என, பல்வேறு படி நிலைகளை செய்து, 13 ஆடைகள் உருவாக்கினர். இவற்றில், கைகளால் உருவாக்கிய புதிய டிசைன்களை, பிரின்டிங் செய்தனர். புதிய டிசைன் உருவாக்கம், ஆடை உற்பத்தி, பிரின்டிங் உள்ளிட்ட அனைத்தும், 8ம் தேதி மதியம் 12:00 மணிக்குள் முடித்தனர். இவற்றை, கல்லூரி டிசைனர்கள் அருந்ததி, பூபதி விஜய், ஜெயந்தி, ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

கல்லூரி தலைவர் (அகாடமிக் மேம்பாட்டு குழு) சீனிவாசன் கூறியதாவது: சுயமாக டிசைன்களை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நிப்ட்-டீ கல்லூரி, 24 மணி நேரத்தில் கைகளால் புதிய டிசைன் உருவாக்கும் சாதனை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

இதற்கான முன்னோட்டமாக, கல்லூரி மாணவர்கள் இணைந்து, கைகளால் டிசைன்களை உருவாக்கி, ஆடை உற்பத்தி செய்து, அவற்றை பிரின்டிங் செய்துள்ளனர். சோதனை சிறப்பாக நிறைவடைந்துள்ளதால், விரைவில், வேறொரு கருத்து அடிப்படையில், சாதனை நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us