இசைத் தமிழ் சங்க ஆண்டு விழா மூத்த கலைஞர்களுக்கு விருது
இசைத் தமிழ் சங்க ஆண்டு விழா மூத்த கலைஞர்களுக்கு விருது
UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 04:29 PM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் இசை தமிழ் சங்கத்தின், 24ம் ஆண்டு விழாவில், மூத்த இசை கலைஞர்களுக்கு ஞானமணி விருது வழங்கப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ் சங்கத்தின், 24ம் ஆண்டு விழா, ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சங்கத்தின் ஆலோசகர் சதீஷ்குமார், துணைத்தலைவர் வெங்கடேசன், பொருளாளர் கமலவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நீண்ட காலமாக இசைத்துறைக்கு சேவையாற்றி வரும், மூத்த இசைக் கலைஞர்களான ராதா வெங்கடேசன், (வீணை) சங்கரி சேதுரத்தினம், (வயலின்) பத்மநாப ராமானுஜ தாசன் (ஹார்மோனியம்), திருமலைநம்பி ராமானுஜதாசன் (மிருதங்கம்), ராமச்சந்திரன் (மிருதங்கம்), ஆகியோருக்கு சங்கீதாலய ஞானமணி விருதுகள் வழங்கப்பட்டன.விழாவில், பெரியநாயக்கன்பாளையம் யாஷிதா இசைப்பள்ளி, எம்.எஸ். இசைப் பள்ளி, பைரவி நிருத்யஷாலா பரதநாட்டிய பள்ளி, ஸ்வர்ணகலா வித்யாலயா, வடசித்துார் சின்மயா கர்நாடக இசை பயிலகம், மேட்டுப்பாளையம் கோகுலம் இசைப்பள்ளி, கோவை இசைக்கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு இசை பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், இசைத்தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், ஜெகநாதன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
