தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுத்தாளர் தேவி பாரதியின் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் தேவி பாரதியின் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் தேவி பாரதியின் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படும்.மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று(டிச.,20) வெளியானது.அதன்படி, தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படும்.தேவி பாரதியின் வாழ்க்கை வரலாறு
* ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன் (வயது 66).* நிழலின் தனிமை, நொய்யல், அற்ற குளத்து அற்புத மீன்கள் உள்ளிட்ட நாவல்களை தேவி பாரதி எழுதியுள்ளார்.* கடந்த 46 ஆண்டுகளாக எழுதி வரும் தேவிபாரதியின் ஒவ்வொரு படைப்பும் மானுட உணர்வின் பேராழத்தை விளக்க முயல்பவை.விருது கிடைத்ததில் மகிழ்ச்சி
இது குறித்து எழுத்தாளர் தேவி பாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெறுவது உத்வேகம் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us