லட்சிய சிகரம் எட்டுவோம் நிச்சயம்: தினமலர் வழிகாட்டி மாணவர்களுக்கு வரம்
லட்சிய சிகரம் எட்டுவோம் நிச்சயம்: தினமலர் வழிகாட்டி மாணவர்களுக்கு வரம்
UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 09:36 AM

திருப்பூர்:
பொதுத்தேர்வு எழுதிவிட்டு, உயர்கல்வியை தேர்வு செய்ய காத்திருந்த மாணவ, மாணவியருக்கு, சரியான வழிகாட்டும் வகையில், திருப்பூரில் நடந்த தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி அமைந்திருந்ததாக மாணவர் மற்றும் பெற்றோர் வரவேற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், அடுத்து என்ன படிக்கலாம்? என்பதை அறிந்துகொள்ள உதவியாக, தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து, திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்த விஷ்வ வித்யா பீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீசக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் கல்வி நிறுவனம், திருப்பூர் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட் ஆப் இந்தியா, ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரிகள் ஸ்பான்சர்களாக பங்கேற்றன.
வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். சேரன் கலைக்கல்லுாரி முதல்வர் நசீமா, எஸ்.என்.ஆர்., கல்லுாரி முதல்வர் சித்ரா, கோவை கற்பகம் கல்லுாரி கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் இயக்குனர் பானு, அமிர்தா இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ரமேஷ் குமார், நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கலை, ஜவுளித்துறை வேலைவாய்ப்புகள், வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், பொறியியல் படிப்புக்கான எதிர்காலம், ராணுவ பணி வாய்ப்புகள், சி.ஏ., படிப்பு குறித்து, வல்லுனர்கள் பேசினர்.கல்லுாரிகளின் ஸ்டால்களை, ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் திறந்து வைத்தார். சேரன் கல்லுாரி குழுமங்களின் நிர்வாக ஆலோசகர் மணிகண்டன், ஸ்ரீசக்தி பொறியியல் கல்லுாரி டீன் ரவிக்குமார், திருப்பூர் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா சேர்மன் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 70க்கும் அதிகமான கல்லுாரிகள், கண்காட்சியில் ஸ்டால்களை அமைத்துள்ளன. கண்காட்சியை பார்வையிட்ட மாணவ, மாணவியரும், பெற்றோரும், கல்லுாரியின் சிறப்புகள், சாதனைகள் மற்றும் கற்பிக்கப்படும் கல்லுாரி பாடப்பிரிவுகள், கல்வி உதவித்தொகை, விடுதி வசதி, கட்டண விவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், அதிக வரவேற்புள்ள படிப்புகள் குறித்த, கையேடுகளை பெற்றுச்சென்றனர். இரண்டு நாட்கள் நடந்த வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கல்லுாரிகள் கண்காட்சி, நேற்றுடன் நிறைவு பெற்றது.
பிளஸ் 2 முடித்துவிட்டோம், அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எந்த கல்லுாரியில் படிக்கலாம் என்றெல்லாம் குழப்பமாக இருந்தவர்களுக்கு, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, சரியான வாழ்க்கையை கட்டமைக்கும் வகையில், சரியான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக, பெற்றோரும், மாணவ, மாணவியரும் தெரிவித்துள்ளனர்.