/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மல்லுார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சி

மல்லுார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சி

மல்லுார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சி

மல்லுார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சி

மல்லுார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லுாரியில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சி

UPDATED : ஜன 17, 2026 10:41 AMADDED : ஜன 17, 2026 10:43 AM


Google News
Latest Tamil News
பனமரத்துப்பட்டி: பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, மல்லூர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. அதற்கு சேலம் ஜெயராம் கல்லூரியில் வீ.ஜீ., நீட் பயிற்சி வகுப்புக்கான விழிப்புணர்வு முகாம், மதர் எஜுகேஷன் இணைந்து சமீபத்தில் நடந்தது.

பல்கலை, கல்லுாரி கல்வியாளர்கள் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, இப்பயிற்சியின் தேவை, பயன்படுத்த உள்ள கற்றல் பொருள், நடக்க உள்ள பயிற்சி தேர்வு, கற்பிக்கும் வல்லுனர் குறித்து விரிவாக விளக்கினார்.மதர் கல்வி அறக்கட்டளை சார்பில், சபி சாநிவாஸ் நீட், ஜே.இ.இ., மட்டுமின்றி, மாணவர்கள் கற்க ஏதுவான பல்வேறு உயர் படிப்புகளை பற்றி விளக்கினார். கல்வியாளர் சின்னமுத்து, பி.பி.டி.,யில் விளக்க உரையாற்றினார்.

மதர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், மல்லூர் கல்வி அறக்கட்டளை இயக்குனர் வினோத்குமார், முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மதியம், மாணவர்கள் பல்வேறு அரங்குகளில் தனித்தனியே வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர்.

இப்பயிற்சியில் மாணவர்கள் சேர பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.