/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நரேலாவில் புதிய பல்கலை கட்ட நடவடிக்கை முதல்வர் ரேகா தகவல்

நரேலாவில் புதிய பல்கலை கட்ட நடவடிக்கை முதல்வர் ரேகா தகவல்

நரேலாவில் புதிய பல்கலை கட்ட நடவடிக்கை முதல்வர் ரேகா தகவல்

நரேலாவில் புதிய பல்கலை கட்ட நடவடிக்கை முதல்வர் ரேகா தகவல்

நரேலாவில் புதிய பல்கலை கட்ட நடவடிக்கை முதல்வர் ரேகா தகவல்

UPDATED : பிப் 04, 2026 09:20 AMADDED : பிப் 04, 2026 09:21 AM


Google News
புதுடில்லி:
“மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய பல்கலை நகரங்களில், நரேலா கல்வி மையத்தையும் சேர்க்க டில்லி அரசு முயற்சிக்கும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

டில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் 2026 - 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் சமச்சீரானது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஒவ்வொரு பிரிவினருக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு உதவி


டில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு மூலதனப் பரிமாற்றத்துக்காக வழங்கப்படும் சிறப்பு உதவி கடந்த பட்ஜெட்டில், 6,275 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதுவே, 2026 - 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 15,380 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நிதி வாயிலாக டில்லி அதிகபட்ச பலன்களை பெற முயற்சிக்கும்.

கடந்த, 2025 - 2026ம் ஆண்டில், 12,483 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில், 13,611 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள், துாய்மையான எரிசக்தி ஊக்கத்தொகை மற்றும் டில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு மேம்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கத்தக்கது. இதனால், டில்லி மக்கள் நேரடியாகப் பயனடைவர்.

ஊக்கம் டில்லி - வாரணாசி அதிவேக ரயில் பாதை, தலைநகரின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

கல்வி வளாகங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆய்வகங்களைத் திறக்கவும், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், டில்லி அதிகபட்ச பலனைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.