/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

UPDATED : மார் 02, 2026 09:58 AMADDED : மார் 02, 2026 10:00 AM


Google News
கிருஷ்ணகிரி:
'வெற்றி நிச்சயம்' என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் மாணவ, மாணவியர், அவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பொதுத்தேர்வு என்பது உங்கள் கல்வி பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகும்.

இது உங்கள் அறிவையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்வு குறித்த பயமோ, பதற்றமோ இன்றி, நேரத்தை முறையாக திட்டமிட்டு தேர்வு அறையில் வினாத்தாள்களை அமைதியாக வாசித்து புரிந்து கொண்டு பதிலளிக்க வேண்டும்.

கடந்த ஓராண்டாக, நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு, இந்த பொதுத்தேர்வில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனை தரும். மேலும், தேர்வு நாட்களில் உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். அனைவரும் சிறப்பாக தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். 'வெற்றி நிச்சயம்' என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.